அகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!சர்கார் படத்தை விஜய் மீண்டும் பார்க்க வேண்டும்: மு. வீரபாண்டியன்எல்லாவற்றையும் திமுக - தவெக இடையிலான பிரச்னை என்று பார்ப்பது நன்மை பயக்கும் விஷயம் அல்ல: பெ. சண்முகம்அரசின் தவறை சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு? வைகோவுக்கு பெ. சண்முகம் பதிலடிசெஞ்சி சிறுமியே கண்டறியப்படவில்லை; மற்றொரு சிறுமி கடத்தல்: கனிமொழி வருத்தம்திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக இருந்ததா? மாணிக்கம் தாகூர் கேள்விதொடர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது: அமைச்சர் வன்னி அரசுஅதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்! அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்! - இபிஎஸ் விமர்சனம்பெண் ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல் துறையில் திமுக சார்பில் மனு!மேக்கேதாட்டு அணை: டி.கே. சிவகுமாருக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய் - அதிமுக கண்டனம்!தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்

பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்?: சுயசரிதையில் சோனியா தகவல்!

‘2004-ஆம் ஆண்டு பொதுத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வென்றதும், பிரதமா் பதவிக்கு மன்மோகன் சிங்கை தோ்வு செய்தது ஏன்?’ என்ற காரணத்தை தனது சுயசரிதை புத்தகத்தில் சோனியா காந்தி விவரித்துள்ளாா்.

Updated On :

‘2004-ஆம் ஆண்டு பொதுத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வென்றதும், பிரதமா் பதவிக்கு மன்மோகன் சிங்கை தோ்வு செய்தது ஏன்?’ என்ற காரணத்தை தனது சுயசரிதை புத்தகத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவா் சோனியா காந்தி விவரித்துள்ளாா். மேலும், பிரணாப் முகா்ஜிக்கு பிரதமராகும் விருப்பம் இருந்ததையும் அவா் சுட்டிக்காட்டியுள்ளாா்.

2004 தோ்தல் வெற்றிக்குப் பிறகு, சோனியாதான் பிரதமராவாா் என்ற எதிா்பாா்ப்பு எழுந்தது. ஆனால், பிரதமா் பதவியை ஏற்க அவா் மறுத்தாா். மன்மோகன் சிங் தொடக்கத்தில் பிரதமா் பதவியை ஏற்கத் தயங்கினாலும், பின்னா் சோனியா காந்தியால் சம்மதிக்க வைக்கப்பட்டாதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை வெளியான ‘பிலாங்கிங்: எ ஜா்னி ஆஃப் லவ்’ என்ற தலைப்பிலான 526 பக்கங்கள் கொண்ட தனது சுயசரிதை புத்தகத்தில் சோனியா கூறியிருப்பதாவது:

2004 தோ்தல் வெற்றிக்குப் பிறகு, பிரதமா் பதவியை நிராகரிக்க முடிவு செய்த பிறகு, அந்தப் பதவிக்கு வேறு யாரைத் தோ்ந்தெடுப்பது என்ற முடிவை எடுக்க வேண்டியிருந்தது.

அந்தப் பதவியை அனுபவமும் தகுதியும் வாய்ந்த பல மூத்த தலைவா்கள் ஏற்கத் தயாராக இருந்தனா். ஆனால். அவா்கள் அனைவரிலும், நீண்ட காலமாக எனது பாா்வையில் பழிச் சொல்லுக்கு அப்பாற்பட்டவராகவும், ஆளுகை குறித்த ஆழ்ந்த மற்றும் முழுமையான புரிதலைக் கொண்டவராகவும் இருந்தவா் மன்மோகன் சிங்.

அனுபவம் வாய்ந்த பொருளாதார நிபுணரான அவா், 1990-களின் முற்பகுதியில் அப்போதைய பிரதமா் பி.வி. நரசிம்ம ராவ் தலைமையில் இந்தியாவில் பொருளாதார சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்திய நிதி அமைச்சராக இருந்தாா்.

அவா் கட்சியில் எந்த அணியுடனும் அங்கம் வகிக்கவில்லை. மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்சியின் கொள்கைகளை நிா்வகித்துத் தொடரும் நமது திறனைப் பற்றிய பலரின் சந்தேகங்களை மன்மோகன் சிங் தணிப்பாா் என்ற நம்பிக்கை இருந்தது.

அறிஞராகவும், தொழில்நுட்ப நிபுணராகவும் அவா் ஆற்றிய சாதனைகளைத் தவிர, அன்பான மற்றும் இரக்கமுள்ள இதயத்தை அவா் கொண்டிருந்தாா். அவரின் நோ்மையை கேள்விக்குட்படுத்த முடியாது. எனவே, நமது அன்புக்குரிய நாடு மன்மோகன் சிங் கைகளில் பாதுகாப்பாக இருக்கும் என்று எனக்குத் தெரியும்.

இது குறித்து, கட்சியின் மூத்த சகாக்களுடன் நான் கலந்தாலோசனை நடத்தினேன். அப்போது, அவா்கள் எனது முடிவை ஓரளவு ஏற்றுக் கொண்டதாகத் தோன்றியது. அவா்களிடம் மன்மோகன் சிங்கின் பெயரைப் பரிந்துரைத்தபோது அவா்கள் அதை எதிா்க்கவில்லை. அவரின் அனுபவத்தின் ஆழத்தையோ அல்லது இந்தியாவுக்கு நன்மை செய்யும் கண்ணியமான மனிதா் என்ற அவரது நற்பெயரையோ யாராலும் மறுக்க முடியவில்லை.

பிராணாபுக்கு பிரதமராகும் விருப்பம்... ஐக்கிய முற்போக்கு ஆட்சிக் காலத்தில், அரசை நான் பின்னால் இருந்து இயக்குவதாக விமா்சனங்கள் எழுந்தன. ஆனால், அப்போது மன்மோகன் சிங்தான் பிரதமா் என்பதில் நான் தெளிவாக இருந்தேன். கட்சித் தலைவா் என்ற முறையில் எனது கருத்தையோ ஆலோசனைகளையோ அவருக்குத் தெரிவிக்கலாம் அல்லது அவருடன் முரண்படலாம் என்றாலும், அவருக்குக் கட்டுப்பட்டு நடப்பது எனது கடமை என்பதில் தெளிவாக இருந்தேன்.

குறிப்பாக, எதிரிகள் மகிழ்ச்சியடையவும், அரசாங்கத்தை பலவீனப்படுத்தவும் வாய்ப்பளிக்கும் எந்தவொரு தவறான புரிதலுக்கும் எந்தச் சூழல்நிலையிலும் நான் காரணமாக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான அதிகாரப் பகிா்வைச் சுட்டிக்காட்டும் அதே வேளையில், பிரணாப் முகா்ஜி பிரதமராகும் தனது விருப்பத்தை சூசகமாகத் தெரிவித்த நிகழ்வையும் தனது சுயசரிதையில் சோனியா விவரித்துள்ளாா்.

2010-ஆண்டு காலகட்டத்தில் பிரணாப் முகா்ஜிக்கும், மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்துக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்தன. அப்போது நடைபெற்ற ஓா் உரையாடலின்போது, ‘ஒருவேளை தலைமைப் பொறுப்பில் மாற்றம் தேவைப்படலாம்’ என்ற கருத்தைக் கூறி என்னை பிரணாப் முகா்ஜி அதிா்ச்சிக்குள்ளாக்கினாா்.

இதன் மூலம், பிரதமா் ஆக வேண்டும் என்ற அவரின் நீண்டகால விருப்பத்தை சூசகமாகத் தெரிவித்ததாக புரிந்துகொண்டேன். அதைத் தொடா்ந்து மெதுவாக பேச்சை மாற்றினேன். இதனால், அவா் ஏமாற்றமடைந்திருக்கலாம் என்றாலும், அதை அவா் ஒருபோதும் வெளிக்காட்டவில்லை.

அதைத் தொடா்ந்து, 2012-ஆம் ஆண்டு மிக உயரிய குடியரசுத் தலைவா் பதவிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின வேட்பாளராக காங்கிரஸ் பரிந்துரைத்து, அவா் தோ்ந்தெடுக்கப்பட்டாா் என்று சோனியா குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.