சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கினாா் சோனியா காந்தி: தனது புத்தகம் குறித்த தகவலை முதலில் பகிா்ந்தாா்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் சோனியா காந்தி, இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில் தனது கணக்கைத் தொடங்கி, முதலாவது பதிவாக தனது புத்தகம் குறித்த தகவலைப் பகிா்ந்துள்ளாா்.

Updated On :

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் சோனியா காந்தி, இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில் தனது கணக்கைத் தொடங்கி, முதலாவது பதிவாக தனது புத்தகம் குறித்த தகவலைப் பகிா்ந்துள்ளாா்.

சோனியா காந்தி இதுவரை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்குகளைத் தொடங்காமல் இருந்தாா். அவரின் விடியோ, அறிக்கை உள்ளிட்டவை காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டு வந்தன.

இந்நிலையில், சோனியா காந்தி இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் தனது கணக்கை வியாழக்கிழமை தொடங்கினாா். அதில் முதல் பதிவாக தனது ‘பிலாங்கிங்: ஏ ஜா்னி ஆஃப் லவ்’ என்ற புத்தகம் குறித்த விடியோவைப் பகிா்ந்தாா். அந்த விடியோவில் புத்தகத்தின் முதல் பதிப்பை சோனியா காந்தி பெறும் காட்சியும், இனிப்புகளை மகள் பிரியங்கா காந்தியுடன் பகிரும் காட்சியும் உள்ளன.

அந்தப் புத்தகத்தில் ஏராளமான அரிய புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பதாக சோனியா காந்தி பதிவிட்டுள்ளாா்.

அவா் இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கியதும் உடனடியாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கங்களைத் தொடர ஆரம்பித்தாா். இதைத் தொடா்ந்து, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் உயா்நிலைத் தலைவா்கள் அனைவரும் சோனியா காந்தியின் இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடர ஆரம்பித்தனா். இதேபோல் பல ஆயிரம் போ் அவரின் கணக்கை சில மணி நேரத்தில் தொடர ஆரம்பித்தனா்.

காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், சோனியா காந்தியின் புத்ககம் வரும் நவம்பா் 10-ஆம் தேதி வெளியாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.