விமானி ஸ்மித் மச்சாரின் துணிச்சலை ராகுல், சோனியா, பிரியங்கா பாராட்டாதது ஏன்? பாஜக கேள்வி
விமானி ஸ்மித் மச்சாரின் துணிச்சல் செயலை காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டாதது குறித்து...

இந்திய விமானி ஸ்மித் மச்சார் | மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி - கோப்புப் படம்
பெரும் விபத்தைத் தவிர்த்த விமானி ஸ்மித் மச்சாரின் துணிச்சலை காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி பாராட்டவில்லை என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "விமானி ஸ்மித் மச்சாரால் இந்தியாவே பெருமிதம் கொள்கிறது. 9/11 போன்ற மற்றொரு சம்பவத்தைத் தடுக்க தன்னுயிரையே பணயம் வைத்த அவரது துணிச்சலான செயல்களைக் கண்டு உலகமே பாராட்டுகிறது.
இது நடந்து முழுதாக ஒருநாள் கடந்து விட்டது. ஆனால், ஸ்மித்தின் இந்தத் துணிச்சலான அசாதாரணமான செயல்களைப் சோனியா காந்தியோ ராகுல் காந்தியோ பிரியங்கா காந்தியோ பாராட்டவில்லை. இந்தியர் ஒருவர் வெளிப்படுத்திய இந்தத் துணிச்சலான செயலை ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.
அர்த்தமற்ற, தேவையற்ற பிரச்னைகளுக்குக்கூட பதிலளிக்கும் ராகுல் காந்தி, அவர்தான் இந்த உலகை மாற்றுவதுபோல பேசுவார். ஆனால், ஸ்மித் மச்சாரின் துணிச்சலைப் பாராட்ட ராகுல் காந்தியால் ஒரு சமூக ஊடகப் பதிவைக்கூட வெளியிட முடியவில்லை.
சோனியா காந்தியின் குடும்பத்துக்கு என்ன பிரச்னை? இந்தியா அல்லது இந்தியர்கள் பற்றி நல்ல விஷயங்கள் ஏதேனும் நடந்தால், ஏன் அவற்றை சோனியா காந்தியின் குடும்பம் ஒத்துக்கொள்வதில்லை? ஓர் இந்தியரின் துணிச்சலான செயலை சர்வதேச தலைவர்களே பாராட்டும்போது, நேருவின் குடும்பத்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சிக்கு இது பழக்கமாகி விட்டது. இதனால்தான் இதுபோன்ற (காங்கிரஸ்) கட்சிகள் விரைவில் மறைந்து விடுகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு புதன்கிழமை (செப். 30) காலை 174 பயணிளுடன் சென்ற விமானத்தில் சக விமானி ஒருவர், இந்திய விமானி ஸ்மித் மச்சாரைக் கத்தியால் குத்தினார்.
கத்திக்குத்தால் ரத்த வெள்ளத்தில் இருந்தபோதும், தாக்குதலுக்குள்ளான விமானி, சாதூர்யமாக செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கி அனைத்து பயணிகளின் உயிரையும் காப்பாற்றினார்.
விமானி ஸ்மித் மச்சாரின் இந்தத் துணிச்சலான செயலுக்கு இந்தியாவில் மட்டுமின்றி, உலக நாடுகளின் தலைவர்களும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான், ஸ்மித் மச்சாரின் துணிச்சல் குறித்து காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பாராட்டு தெரிவிக்கவில்லை என கிஷன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
యావదà±à°à°¾à°°à°¤à° à°à°°à±à°µà°ªà°¡à±à°¤à±à°¨à±à°¨ à°à±à°ªà±à°à±à°¨à± à°¸à±à°®à°¿à°¤à± à°®à°à±à°à°°à±.. మరౠ9/11 తరహా à°à°à°¨ à°à°°à°à°à±à°à°¡à°¾ à°ªà±à°°à°¾à°£à°¾à°²à°¨à± పణà°à°à°¾ à°ªà±à°à±à°à°¡à°¾à°¨à±à°¨à°¿, à°à°¤à°¨à°¿ à°§à±à°°à±à°¯à°¸à°¾à°¹à°¸à°¾à°²à°¨à± à°à±à°¸à°¿ యావతౠపà±à°°à°ªà°à°à° హరà±à°·à°¿à°à°à°¿.. à°à° à°°à±à°à± à°ªà±à°°à±à°¤à°¯à°¿à°à°¦à°¿.
— G Kishan Reddy (@kishanreddybjp) October 2, 2026
à°à°¯à°¿à°¨à°¾.. à°à° à°à°¾à°°à°¤à±à°¯à±à°¡à± à°ªà±à°°à°¦à°°à±à°¶à°¿à°à°à°¿à°¨ à° à°à°¸à°¾à°§à°¾à°°à°£ à°§à±à°°à±à°¯à°¸à°¾à°¹à°¸à°¾à°²à°¨à± à°à°¨à±à°¸à° à°à±à°°à±à°¤à°¿à°à°à°¿, à°à°à°¿à°¨à°à°¦à°¿à°à°à°¾à°²à°¨à±à°¨ à°à°à°à°¿à°¤ à°à±à°à°¾à°¨à°â¦
Summary
Union Minister Kishan Reddy attacks Sonia, Rahul, Priyanka for ''not acknowledging'' heroism of Capt Smit Machchar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






