
மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!
மும்பையில் ஞானேஷ் குமாருக்கு எதிரான சிஜேபியின் போராட்டத்தில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் பங்கேற்றுள்ளது குறித்து...

மும்பை சிஜேபி போராட்டத்தில் பாலிவுட் நடிகர் நசீருதீன் ஷா மற்றும் பாடகர் விஷால் தத்லானி - cjp
மும்பையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி நடைபெறும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்தில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் பங்கேற்றுள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்) நடவடிக்கைகளில் 2 தேர்தல் ஆணையர்கள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சட்டத்துக்கு எதிரான வகையில் தன்னிச்சையாகச் செயல்பட்டதாக வெளியான செய்திகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமெனவும், அவர் மீது குற்றவிசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி மும்பையின் சிவாஜி பூங்கா பகுதியில் இன்று (அக்.2) முதல் சிஜேபி தலைமையில் போராட்டம் தொடங்கியுள்ளது. இந்தப் போராட்டத்தில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில், தேசத் தந்தை மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி மற்றும் பாலிவுட் நடிகர் நசீருதீன் ஷா, நடிகை ஷபானா ஆஸ்மி, பாடகர் விஷால் தத்லானி ஆகியோர் பங்கேற்று இளைஞர்களின் போராட்டத்துக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஞானேஷ் குமார் பதவி விலகவில்லை என்றால் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் நடத்தப்படும் என சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Mahatma Gandhi's great-grandson has participated in a protest held in Mumbai by the CJP demanding the resignation of Gyanesh Kumar.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




