திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி சிஜேபி நாளை முதல் போராட்டம்...

cjp protest demanding gyanesh kumar resignation

சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே - கோப்புப் படம்

Published On :

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி) நாளை (அக். 2) மும்பையில் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைகளில் 2 தேர்தல் ஆணையர்கள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் சட்டவிரோதமான முறையில் தன்னிச்சையாகச் செயல்பட்டதாக வெளியான செய்திகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இதையடுத்து, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமெனவும், அவர் மீது குற்றவிசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி ஏராளமான எதிர்க்கட்சிகள் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியை ஞானேஷ் குமார் ராஜிநாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தி, கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நாளை (அக். 02) மாலை 4 மணிக்கு மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

இதுபற்றி, சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே கூறுகையில்,

“ஞானேஷ் குமார் பதவி விலகும் வரையில் எங்களின் போராட்டம் தொடரும். கோவா, கர்நாடகம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பிகார் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் போராட்டங்கள் நடத்தப்படும்.

ஞானேஷ் குமார் பதவி விலகவில்லை என்றால் அக்டோபர் மாதத்தின் இறுதியில் தில்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக சிஜேபி தலைமையில் நடைபெற்ற போராட்டம் நாடு முழுவதும் இளைஞர்களின் ஆதரவைப் பெற்று மாபெரும் போராட்டமாக உருவெடுத்ததைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சராகப் பதவி வகித்த தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Cockroach Janta Party will stage a protest in Mumbai tomorrow demanding the resignation of CEC Gyanesh Kumar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.