தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டியது விவாதத்திற்கு அப்பாற்பட்டது என கே.சி. வேணுகோபால் பேசியது குறித்து...

கே.சி. வேணுகோபால் - பிடிஐ
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டியது விவாதத்திற்கு அப்பாற்பட்டது எனவும் இதில் விவாதம் தேவையற்றது என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று (செப். 30) தெரிவித்தார்.
தில்லியில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முந்தைய வாக்காளர் பட்டியலை, இனிவரும் அனைத்துத் தேர்தல்களிலும் பயன்படுத்த வேண்டும் எனவும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
வாக்குத் திருட்டுக்கு எதிராக இந்தியா கூட்டணி திரண்டு நிற்பதைக் குறிப்பிட்டு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கே.சி. வேணுகோபால் பதிவிட்டுள்ளதாவது:
நடந்து முடிந்த ஒவ்வொரு தேர்தல்களிலும் முறைகேட்டில் ஈடுபட்டு மாநிலங்களை பாஜகவுக்கு தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறார் ஞானேஷ் குமார். அவருக்கு எதிரான போராட்டத்தை காங்கிரஸ் கட்சி தீவிரமாக கையில் எடுத்துள்ளது. நாட்டின் ஜனநாயகத்தைக் காக்க இந்த பிரச்னையை நாடு முழுவதும் கொண்டு செல்ல இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது.
எங்களின் சமரசமற்ற கோரிக்கைகள் இவைதான். ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும். எதிர்காலத்தில் நடத்தப்படும் தேர்தல்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முந்தைய வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்த வேண்டும்.
தொழில்நுட்பக் காரணங்களால் உண்மையான வாக்காளர்கள் நீக்கப்படுவதில் இருந்து நியாயமான தீர்வு வேண்டும். வாக்குப் பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டும்.
ஜனநாயகத்தை காப்பதற்காக அக். 2 - 8 ஆம் தேதி வரை போராட்டங்கள் நடத்தப்படவுள்ளன. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அக். 6ஆம் தேதி தலைமைத் தேர்தல் அலுவலகத்தை நோக்கி பேரணி செல்லவுள்ளோம். அக்டோபர் 2 வது வாரத்தில் எங்கள் கோரிக்கைகளுடன் குடியரசுத் தலைவரை சந்திக்கவுள்ளோம் எனப் பதிவிட்டுள்ளார்.
Summary
Gyanesh Kumar is the one who handed over states to the BJP through elections: Congress
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







