ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்தேர்தல் ஆணையம் நோக்கி அக். 6 பேரணி! போராட்டங்களை அறிவித்த இந்தியா கூட்டணி!ரூ. 100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது! உயர் நீதிமன்றம்தவெகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை!தில்லியில் இந்தியா கூட்டணிக் கூட்டம் தொடங்கியது! 19 கட்சிகள் பங்கேற்பு!துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு!முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

அக். 6-ல் தேர்தல் ஆணையம் முற்றுகை போராட்டம்! இந்தியா கூட்டணி அறிவிப்பு!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தொடர் போராட்டங்களை இந்தியா கூட்டணி அறிவித்திருப்பது பற்றி...

India alliance

இந்தியா கூட்டணி தலைவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு - PTI

Published On :

இந்தியத் தேர்தல் ஆணையத்தை நோக்கி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அக்டோபர் 6 ஆம் தேதி பேரணியாகச் செல்லவுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் 14 முறை எதிர்ப்பு தெரிவித்த போதிலும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிப்பட்டமுறையில் முடிவெடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவது குறித்து இந்தியா கூட்டணிக் கட்சிகள் இன்று ஆலோசனை நடத்தின.

இதனைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணித் தலைவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:

”தேர்தல் ஆணையத்தின் மூன்று ஆணையர்களும் வெறும் பகடைக்காய்களாகவே உள்ளனர். அமித் ஷாவும் மோடியும் அவர்களைக் கைப்பாவைகளைப் போல ஆட்டிவைக்கின்றனர். எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுப் போராடுவது குறித்து அனைத்துக் கட்சிகளும் விவாதித்தன.

இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஜனநாயகம் காப்போம் என்ற தலைப்பில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும். வருகின்ற அக்டோபர் 2 முதல் அக்டோபர் 8 வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் போராட்டங்களை நடத்துவோம். மேலும் அக்டோபர் 6 அன்று, அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் தேர்தல் ஆணையத்தை நோக்கிப் பேரணியாகச் சென்று முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளோம்.

அக்டோபர் இரண்டாம் வாரத்தில் குடியரசுத் தலைவரைச் சந்திக்க நேரம் கோருவோம். அவரிடம் தேர்தல் ஆணையம் எவ்வாறு கையகப்படுத்தப்படுகின்றன என்பதை விளக்குவோம்.

அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஐந்து பெரிய பேரணிகள் நடத்தப்படும். அதற்கான இடங்களும் தேதிகளும் விரைவில் இறுதி செய்யப்படும். 'வாக்குத் திருட்டு' குறித்து ராகுல் காந்தியும் மமதா பானர்ஜியும் கூறிவந்ததை இப்போது அனைவரும் ஏற்றுக்கொள்வதால், நவம்பர் 1 அன்று தில்லியில் ஒரு பெரிய பேரணி ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.