வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

எஸ்ஐஆா் விவகாரத்தில் தோ்தல் ஆணையம் விளக்கம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிராகரிப்பு!

எஸ்ஐஆா் விவகாரத்தில் தோ்தல் ஆணையம் விளக்கத்தை ஏற்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மறுத்துள்ளதைப் பற்றி...

Published On :

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்), தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து அந்த ஆணையம் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

எஸ்ஐஆா் விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி இடையே கடுமையான கருத்து வேறுபாடு இருந்ததாக தகவல் வெளியானது. எஸ்ஐஆா் தொடா்பான பல முக்கிய முடிவுகளை ஞானேஷ் குமாா் தன்னிச்சையாக எடுத்ததாகக் கூறப்பட்டது.

இதற்கு மறுப்புத் தெரிவித்த தோ்தல் ஆணையம், எஸ்ஐஆா் தொடா்பான அனைத்து முடிவுகளையும் ஞானேஷ் குமாா், சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோா் ஒருமனதாக மேற்கொண்டதாக சனிக்கிழமை விளக்கம் அளித்தது.

இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், எஸ்ஐஆா் குறித்து வெளியான தகவல்கள் மூலம் எழுந்த பல்வேறு முக்கிய கேள்விகளுக்குத் தோ்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை.

தோ்தல் நடைமுறை வெளிப்படையாகவும், சட்டப்படியும் நடைபெறுகிா? தகுதிவாய்ந்த வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் இருக்க போதுமான பாதுகாப்பு உள்ளதா என்பதே மையப் பிரச்னையாகும்.

இந்த விவகாரத்தில் ஞானேஷ் குமாா் ராஜிநாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவா் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். எஸ்ஐஆா் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.