
ஞானேஷ் குமார் பதவி விலகினாலும்... பதில் கூறியே ஆக வேண்டும்: ராகுல் காந்தி விமர்சனம்!
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகினாலும் அவரை இதைச் செய்ய வைத்தவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளது குறித்து...

ஞானேஷ் குமார் / ராகுல் காந்தி - கோப்புப் படம்
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகினாலும் அவரை இதைச் செய்ய வைத்தவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை (செப். 28) தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் 14 முறை எதிர்ப்பு தெரிவித்த போதிலும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிப்பட்டமுறையில் முடிவெடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப் பதிவில் பதிவிட்டுள்ளதாவது:
யமுனை நதிக்கரையில் உள்ள பேலா எஸ்டேட்டில் 728 பேர் வசிக்கின்றனர். எஸ்ஐஆர்-க்கு பிறகு, வாக்காளர் பட்டியலில் ஒரே ஒரு பெயர் மட்டுமே எஞ்சியுள்ளது. மற்ற 727 பெயர்களும் நீக்கப்பட்டுவிட்டன. இந்த மக்கள் பல ஆண்டுகளாக இங்கு வசித்து வருகின்றனர்.
அவர்கள் ஏற்கெனவே 2024 மக்களவைத் தேர்தலிலும், 2025 தில்லி தேர்தலிலும் வாக்களித்துவிட்டனர். 2023-இல் அவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. ஆனால், அவர்கள் எங்கும் செல்லவில்லை, அவர்கள் இன்னும் இங்கேயேதான் இருக்கிறார்கள். இன்று நான் அவர்களின் குடிசைகளுக்குச் சென்று, தேர்தல் ஆணையம் அவர்களுக்கு என்ன செய்துள்ளது என்பதை அவர்களிடமிருந்தே நேரடியாகக் கேட்டறிந்தேன்
வீடு இருப்பதற்கும் இல்லாததற்கும் வாக்களிக்கும் உரிமைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஞானேஷ் குமாரே, 'வீட்டு எண் 0' என்பது வீடற்றவர்களுக்கானது என்று கூறியுள்ளார். ஆனாலும், 727 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது எஸ்ஐஆர் அல்ல. இது ஒரு வாக்குத் திருட்டு முறை. எளிய மக்களிடமிருந்து அவர்களின் ஒரே அதிகாரமும் பறிக்கப்படுகிறது. ஞானேஷ் குமார் பதவி விலகுவார். ஆனால், அவரை இதைச் செய்ய வைத்தவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
यमà¥à¤¨à¤¾ à¤à¤¿à¤¨à¤¾à¤°à¥ बà¥à¤²à¤¾ à¤à¤¸à¥à¤à¥à¤ मà¥à¤ 728 लà¥à¤ रहतॠहà¥à¤à¥¤ SIR à¤à¥ बाद वà¥à¤à¤° लिसà¥à¤ मà¥à¤ सिरà¥à¤«à¤¼ à¤à¤ नाम बà¤à¤¾ - बाà¤à¥ 727 नाम à¤à¤¾à¤ दिठà¤à¤à¥¤
— Rahul Gandhi (@RahulGandhi) September 28, 2026
यॠलà¥à¤ दशà¤à¥à¤ सॠयहाठरह रहॠहà¥à¤à¥¤ 2024 à¤à¥ लà¥à¤à¤¸à¤à¤¾ à¤à¥à¤¨à¤¾à¤µ à¤à¤° 2025 à¤à¥ दिलà¥à¤²à¥ à¤à¥à¤¨à¤¾à¤µà¥à¤ मà¥à¤ वà¥à¤ डाल à¤à¥à¤à¥ हà¥à¤à¥¤ 2023 मà¥à¤ à¤à¤¨à¤à¥ à¤à¤° तà¥à¤¡à¤¼ दिठà¤à¤ थॠ- पर यॠà¤à¤¹à¥à¤ नहà¥à¤ à¤à¤, यहà¥à¤â¦ pic.twitter.com/27cJZjqJg6
Summary
Leader of the Opposition in the Lok Sabha Rahul Gandhi stated on Monday (Sept. 28) that even if Chief Election Commissioner Gyanesh Kumar resigns, those who compelled him to take this action must be held accountable.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


தேர்தல் சூதாட்டங்களுக்கு மோடி - அமித் ஷாவால் நியமிக்கப்பட்டவர் ஞானேஷ் குமார்: ராகுல் காந்தி விமர்சனம்!

ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணி நேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!





