
ஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலை வரும்: பிரேமலதா பேச்சு!
ஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலை வரும் என பிரேமலதா பேசியது குறித்து...

ஆதவ் அர்ஜுனா, பிரேமலதா விஜயகாந்த் - TN Assembly
தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலை வரும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திங்கள்கிழமை (செப். 28) பேசியுள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு வரும் அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுராந்தகம் நெல்வாய் கூட்டுச்சாலை பகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இதனிடையே, மதுராந்தகம் தொகுதியில் நேற்று (செப். 27) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ”திமுக வெற்றி பெற்றால் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ராஜிநாமா செய்கிறேன்” என்று பேசியிருந்தார்.
இதுகுறித்து இன்றைய தேர்தல் பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யைப் பார்த்து, மக்கள் உங்களை நம்பி வாக்களித்துள்ளனர். ஏன் இதெல்லாம் செய்ய செய்யவில்லை என்று கேட்டால், உடனே ஆதவ் அர்ஜுனா என்பவர் எழுந்து நின்றுவிடுவார்.
யார் என்ன கேள்வி கேட்டாலும் யார் எந்தப் பிரச்னையை பேசினாலும் அது எந்தத் துறை சார்ந்த கேள்வியாக இருந்தாலும் அவர்தான் பேசுவார்.
எதைக் கேட்டாலும் திமுகவைத் தாக்கி பேசுவார். இதைத் தவிர ஒன்றும் தெரியாது. தம்பி ஆதவ் அர்ஜுனா நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள். மக்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டால் அதற்கு பதில் கிடையாது. திமுக மீது அவருக்கு என்னதான் காழ்ப்புணர்ச்சியோ தெரியவில்லை. ஒரு நாளைக்கு ஒரு லட்சம் முறை திமுக திமுக என்று சொல்வார் என நினைக்கிறேன்.
இங்கே பிரசாரத்துக்கு வந்த போதும் சவால் விடுத்து விட்டு சென்றுள்ளார். மக்கள் என்பது உண்மை என்றால் மதுராந்தகம் மக்கள் துரோகத்தின் பக்கம் நிற்கமாட்டார்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய நேரம் இது. எனவே, ஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலை வரும் என்று தெரிவித்தார்.
Summary
DMDK General Secretary Premalatha stated on Monday (Sept. 28) that a situation would arise requiring Aadhav Arjuna to step down from his post.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





