பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று குடமுழுக்குஇன்று பிரதமா் மோடி பிறந்த நாள்: வாரணாசியில் பிரம்மாண்ட விழாஇன்று சென்னை திரும்புகிறாா் முதல்வா் விஜய்!கைதிகளைக் கண்காணிக்க ஆயுதப் படைக் காவலா்கள் சீருடையில் கேமரா

காலை 11 முதல் 3.30 வரையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படக் கூடாது: ஆதவ் அர்ஜுனா

பள்ளிகளில் அல்லது விளையாட்டுச் சங்கங்கள் நடத்தும் போட்டிகள் பகலில் நடத்தப்பட கூடாது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியது குறித்து...

Minister Aadhav Arjuna

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - Youtube

Published On :

பள்ளிகளில் அல்லது விளையாட்டுச் சங்கங்கள் நடத்தும் போட்டிகள் பகலில் நடத்தப்பட கூடாது என விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

வாணியம்பாடி அருகே பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மாணவர், போட்டியின்போது காயமடைந்து உயிரிழந்ததாகவும், அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

இதனையடுத்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது, "பொதுவாகவே அகில இந்திய அளவில் இம்மாதிரியான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இவை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சரிடம் கூறியுள்ளோம்.

ஒரு குழந்தை, ஒரு நாளில் 2 அல்லது 3 விளையாட்டுகளில் விளையாட முடியும். ஆனால், போட்டிகளில் 150 விளையாட்டுச் சங்கங்கள் வருகிறபோது, 3 நாள்களிலேயே அத்தனை போட்டிகளும் நடத்தப்படுகிறது.

குழந்தைகள் காலை 6 முதல் 11 மணிவரையில்தான் விளையாட வேண்டும். ஆனால், விளையாட்டுச் சங்கங்களால் 12, 1, 2 மணிவரையில் குழந்தைகள் விளையாட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இதனால், வெயிலின் தாக்கம் குழந்தைகளின் உள்ளுறுப்புகளையும் பாதிக்கிறது.

இதுதொடர்பாக புதிய கொள்கைகளை துறை செயலர்களுடன் விவாதிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணிவரையில் எந்தவொரு போட்டியும் நடத்தக் கூடாது என முடிவெடுக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம். கூடிய விரைவில் அதற்கான தனித் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. இனிவரும் காலங்களில் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படக் கூடாது" என்று தெரிவித்தார்.

Summary

Sports competitions should not be held between 11:00 AM and 3:30 PM, says Minister Aadhav Arjuna

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.