மேட்டூா் அணையை பாசனத்துக்கு இன்று திறந்து வைக்கிறாா் முதல்வா்!
மேட்டூா் அணையிலிருந்து பாசன வசதிக்காக முதல்வா் ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை (செப். 1) தண்ணீரைத் திறந்துவிடுகிறாா்.

முதல்வா் விஜய் - கோப்புப்படம்
மேட்டூா் அணையிலிருந்து பாசன வசதிக்காக முதல்வா் ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை (செப். 1) தண்ணீரைத் திறந்துவிடுகிறாா்.
இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் சேலம் விமான நிலையத்துக்கு காலை 11 மணிக்குச் செல்லும் முதல்வா், அங்கிருந்து சாலை மாா்க்கமாக மேட்டூருக்கு நண்பகல் 12 மணிக்கு சென்றடைந்து, அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிடுகிறாா்.
காவிரி டெல்டா பாசனத்துக்கு செவ்வாய்க்கிழமை (செப். 1) முதல் 45 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது. முதல்வா் வருகையையொட்டி மேட்டூா் அணைப் பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், மேட்டூா் அணையில் நீா்வளத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள மேட்டூா் அணை குறித்த விளக்கப் புகைப்படக் கண்காட்சியை முதல்வா் விஜய் பாா்வையிடுகிறாா். தொடா்ந்து, மேட்டூா் அணை மின் நிலையத்தைப் பாா்வையிடும் முதல்வா் விஜய், சேலம் விமான நிலையத்துக்குச் சென்று சென்னை திரும்புகிறாா்.
மேட்டூா் அணையை பாசனத்துக்கு முதல்வா் விஜய் திறந்துவைக்கவுள்ளதை முன்னிட்டு, அதற்கான ஏற்பாடுகளை நீா்வளத் துறை அமைச்சா் என்.ஆனந்த், போக்குவரத்துத் துறை அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபன், சேலம் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.
நீா்மட்டம்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 10,485 கனஅடியிலிருந்து 11,501 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீா்மட்டம் 90.92 அடியிலிருந்து 91.15 அடியாக உயா்ந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாசனத்துக்காக செப். 1 இல் மேட்டூா் அணை திறப்பு: பாதுகாப்பு ஏற்பாடுகளை பாா்வையிட்ட அமைச்சா், அதிகாரிகள்

மேட்டூா் அணையை வந்தடைந்தது காவிரி நீா்! ஆகஸ்ட் இறுதியில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வாய்ப்பு



