முதல்வர் விஜய்யுடன் மாணிக்கம் தாகூர் சந்திப்பு!போர்ப் பதற்றம்! ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு!கண்ணியத்துடன் பேசுங்கள்: சட்டப்பேரவையில் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தல்பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் வேட்டியின் அளவு 4 முழமாகக் குறைப்பு: அமைச்சர்டாஸ்மாக் ஊழியர்களுக்கு நாளைமுதல் ஊதிய உயர்வு!தவெக அரசுடன் சென்னை மேயர் சேர்ந்து செயல்படுவதில்லை: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டுகொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? டிடிவி தினகரன் கேள்வி! தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்புகொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவை வெளியிடக் கோரிய பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது குறித்து...

Supreme Court

உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 4:54 pm IST

பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவை அனைவருக்கும் தெரியும்படி, வெளியிடக் கோரிய பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (ஆக. 31) நிராகரித்து விட்டது.

பெட்ரோல் நிலையங்களில் உள்ள ஒவ்வொரு விநியோகக் குழாயிலும், அதில் உள்ள எத்தனாலின் சரியான சதவீதத்தை தெரியப்படுத்துமாறு மத்திய அரசுக்கும், பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கும் உத்தரவிடக் கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (ஆக. 31) நிராகரித்து விட்டது.

மனுதாரரான வழக்கறிஞர் நரேந்திர கோஸ்வாமி தாக்கல் செய்த இந்த மனுவை, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் பி.பி. வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணை செய்தது.

இந்த வழக்கில் தனது வாதத்தை வைத்த நரேந்திர கோஸ்வாமி, “பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலின் அளவை தெரிந்து கொள்ள வாடிக்கையாளர்களுக்கு முழு உரிமை உண்டு. பெட்ரோல் நிலையங்களில் வழங்கப்படும் ரசீதுகளிலும் எத்தனாலின் அளவு குறித்த எந்தத் தகவலும் இல்லை.

எனவே, பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலின் அளவை வெளிப்படைத் தன்மையாக அனைவருக்கும் தெரியும்படி செய்தால் இ20 பெட்ரோலின் மீது மக்களுக்கு உள்ள சந்தேகங்களும் தீரும்” என்று வாதிட்டார்.

இதற்குப் பதிலளித்த அமர்வு, “மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை” எனக் கூறி இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என நிராகரித்து விட்டது.

பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலக்கும் இ20 பெட்ரோல் பயன்பாட்டால் வாகனங்கள் பழுதாகும் மற்றும் மைலேஜ் குறையும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளதால் அதற்குக் கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், அதை மத்திய அரசு மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The Supreme Court dismissed a Public Interest Litigation (PIL) on Monday (August 31) seeking the disclosure of the quantity of ethanol mixed with petrol.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.