FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

பால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

பால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்த்தப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

முதல்வர் சி. ஜோசப் விஜய்

Published On :58 வினாடிகள் முன்பு

தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டர் ரூ.38 லிருந்து ரூ. 41 ஆக உயர்த்தப்படுவதாக 10 நாள்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ரூ.3 உயர்த்தி கொள்முதல் விலை ரூ.44 ஆக உயர்த்தப்படுவதாக அறிவித்திருக்கிறார் முதல்வர் ஜோசப் விஜய்.

தமிழ்நாட்டில் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட நிலையில், அதனை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, தமிழக பேரவையில் இன்று அவை விதி 110-ன் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் விஜய், பால் வழங்கும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளர்கள் பயன்பெறும் வகையில் லிட்டர் ஒன்றுககு கூட்டுறவு சங்கம் மூலம் ஒரு ரூபாய் உயர்த்தவும் ஊக்கத் தொகையை 3 முதல் 5 ரூபாய் உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டு கொள்முதல் விலை 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக கடந்த 19.8.2026 அறிவித்தோம்.

ஆனால், கறவை மாடுகளின் செலவினங்கள் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டி, பால் கொள்முதல் விலை மேலும் உயர்த்த, பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை பரிசீலித்து அரசு லிட்டர் ஒன்றுக்கு மேலும் மூன்று ரூபாய் உயர்த்தி 44 ரூபாயாக வழங்க முடிவு செய்துள்ளது என முதல்வர் அறிவித்துள்ளார்.

ஆவின் விலை உயர்வால் கூடுதலாக ஒரு மாதத்துக்கு ரூ.60 கோடியும் ஆண்டு ரூ.720 கோடியும் செலவாகும் என்று அவையில் முதல்வர் விஜய் கூறினார்.

ஆவின் பால் நிறுவனம்

தமிழ்நாட்டில் 8,800 பால் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 3,16,000 பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினசரி 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, ஆவின் நிறுவனத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 31 லட்சம் லிட்டர் பால் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது 4.3% கொழுப்பு சத்து மற்றும் 8.2% இதர சத்துகள் அடங்கிய ஒரு லிட்டர் பாலுக்கு கொள்முதல் விலையாக 35 ரூபாயும், மாநில ஊக்க தொகையாக ஒரு லிட்டர் பாலுக்கு 3 ரூபாயும் ஆக மொத்தம் ஒரு லிட்டருக்கு கொள்முதல் விலை 38 ரூபாய், 5.11.2022 முதல் வழங்கப்பட்டு வந்தது. அது 19ஆம் தேதி ரூ.41 ஆக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 3 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.44 ஆக மாற்றப்பட்டுள்ளது.

சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது பால் கொள்முதல் விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Milk procurement price hiked by another Rs. 3: CM Vijay announces

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.