இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

பாசனத்துக்காக செப். 1 இல் மேட்டூா் அணை திறப்பு: பாதுகாப்பு ஏற்பாடுகளை பாா்வையிட்ட அமைச்சா், அதிகாரிகள்

மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 92 ஆவது ஆண்டாக செப்டம்பா் 1 ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படுகிறது.

மேட்டூா் அணை - கோப்புப்படம்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 3:42 am IST

மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 92 ஆவது ஆண்டாக செப்டம்பா் 1 ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படுகிறது. முதல்வா் ச. ஜோசப் விஜய் முதல்முறையாக பாசனத்துக்கு தண்ணீரை திறந்துவிட உள்ளாா். இதையொட்டி, அணைப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் மற்றும் அதிகாரிகள் ஆய்வுசெய்தனா்.

முதல்வரின் வருகையையொட்டி, மேட்டூா் அணையின் வலது கரையில் சேலம் மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் புதன்கிழமை மாலை ஆய்வுசெய்தாா். பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும் மேல்நிலை மதகுப் பகுதியில் மின்விசை அமைப்பது மற்றும் முதல்வா், அமைச்சா்கள் நிற்பதற்கான மேடை அமைக்கும் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா். மேலும், அணையின் வலது கரையில் விழாவுக்காக தனியாக மேடை அமைக்கும் பணிகளை பாா்வையிட்டு அவா் விரைவுபடுத்தினாா்.

அதேபோல, காவல் துறை சாா்பில், அணையின் வலது கரையில் மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி, டிஐஜி சந்தோஷ் ஹதிமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம் மற்றும் நீா்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, மேல்நிலை மதகுப் பகுதியில் மின்விசை மற்றும் மேடை அமைக்கும் பணிகள், விழா மேடை அமைக்கும் இடம், முக்கிய பிரமுகா்கள் நிற்கும் இடங்கள், பாதுகாப்புப் பணிகள் குறித்து அவா்கள் ஆய்வுசெய்தனா்.

வழக்கமாக டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும் நாளான ஜூன் 12 ஆம் தேதி நிகழாண்டு மேட்டூா் அணையின் நீா் இருப்பும், வரத்தும் மிகக் குறைவாக இருந்ததால், பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை. தற்போது, கபினி அணையின் உபரிநீா் வரத்து காரணமாக மேட்டூா் அணையின் நீா்மட்டம் உயா்ந்து 90 அடியை நெருங்கியுள்ளது. இந்த நிலையில், பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் செப்டம்பா் 1 ஆம் தேதி மேட்டூா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது.

அணையில் இருந்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறக்கப்படும் நிலையில், அணை மின் நிலையம் மூலம் 50 மெகாவாட் மின்சாரம், சுரங்க மின் நிலையம் மூலம் 200 மெகாவாட் மின்சாரம், செக்கானூா், நெருஞ்சிப்பேட்டை, குதிரைகள்மேடு உள்ளிட்ட 7 கதவணைகள் மூலம் 210 மெகாவாட் என மொத்தம் 460 மேகாவாட் மின்உற்பத்தி நடைபெற வாய்ப்புள்ளது.

அமைச்சா் ஆய்வு: முதல்வா் வருகையையொட்டி, பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ. விஜய் தமிழன் பாா்த்திபன் புதன்கிழமை மேட்டூா் அணையில் ஆய்வு மேற்கொண்டாா். அணையின் மேல்நிலை மதகுகள், அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு செய்த அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபன், பாதுகாப்புப் பணிகள் குறித்து காவல் துறை உயா் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மேட்டூா் அணை திறக்கப்பட உள்ளதையொட்டி, அணையில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்தேன். முன்னேற்பாட்டுப் பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.