நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!

நேபாள வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளதாகத் தகவல்...

nepal floods

நேபாள வெள்ளத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு... - ஏபி

Published On :2 வினாடிகள் முன்பு

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தின் கோஷி ஆற்றில் இன்று (ஆக. 26) திடீரென ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி 100-க்கும் அதிகமான இந்தியர்கள் உள்பட ஏராளமானோரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த வெள்ளத்தால், ரஸ்காவதி எனும் பகுதியே அடையாளம் தெரியாமல் சிதைந்துள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் அங்குள்ள பல்வேறு முக்கிய கட்டமைப்புகள் அடித்துச் செல்லும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், நேபாள வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளதாகவும், காவல்துறையைச் சேர்ந்த 22 பேரைக் காணவில்லை எனவும் நேபாள காவல் துறையின் செய்தித்தொடர்பாளர் அபி நாராயண் காஃப்லே தெரிவித்துள்ளார்.

இருப்பினும், வெள்ளத்தில் பலியானவர்களில் இதுவரை 72 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

முன்னதாக, நேபாளத்துக்குச் சுற்றுலா சென்றிருந்த 36 பெண்கள் உள்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 பேர் வெள்ளத்தால் அங்கு சிக்கித் தவிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been reported that the death toll from the massive floods in Nepal has risen to 95.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.