
நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு
நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

IANS
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சுற்றுலா சென்ற 57 தமிழர்கள் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தில் போட்டேகோஷி (Bhotekoshi) ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வெள்ளப்பெருக்கினால் நுவாகோட், தாடிங் மாவட்டங்களில் 105 இந்தியர்களைக் காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் கும்பகோணத்திலிருந்து சுற்றுலா ஏஜென்சி மூலமாக நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 57 தமிழர்கள் சிக்கியுள்ளனர். இதில் ஒரு பேருந்தில் சென்ற 20 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 பேருந்துகளில் சென்ற மீதியுள்ள 37 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர் இவர்கள் திருக்கயிலாயம் செல்ல நேபாளம் சென்றுள்ளனர்.
நேபாள காவல்துறையினர், மீட்புப் படையினர் இணைந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
உதவி எண்கள் அறிவிப்பு!
நேபாளம் பெரு வெள்ளத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 -க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ள நிலையில், அவர்களின் நிலை குறித்து அறிய தமிழக அரசின் அயலகத் தமிழர் துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கான உதவி எண் - 1800 309 3793
வெளிநாடு உதவி எண்கள் - +91 8069009901, 08069009901
மிஸ்டு கால் அழைப்புக்கு +91 8069009900 / 8069009900 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Summary
Nepal flood: helpline numbers announced for tamils
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






