
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 9 பேர் பலி; 105 இந்தியர்களின் நிலை?
நேபாளத்தில் போட்டேகோஷி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது பற்றி...
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு - ANI
சீன எல்லையையொட்டிய நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தில் போட்டேகோஷி (Bhotekoshi) ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் சியாப்ருபெசி உள்ளிட்ட முக்கிய பகுதிகள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகவும் வெள்ளப்பெருக்கு திடீரெனதான் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
ஆற்றில் நீர்வரத்து திடீரென உயர்ந்ததற்குக் காரணம் பனிப்பாறை உடைந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தெரியவில்லை.
ரசுவா, நுவாகோட், தாடிங், கோர்கா, சித்வான் ஆகிய மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த வெள்ளப்பெருக்கினால் நுவாகோட், தாடிங் மாவட்டங்களில் 105 இந்தியர்களைக் காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமாக 400 பேர் வரையில் காணாமல் போயுள்ளனர்.
இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் கும்பகோணத்திலிருந்து சுற்றுலா ஏஜென்சி மூலமாக நேபாளம் சென்ற 50 -க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ளனர். இதில் ஒரு பேருந்தில் சென்ற 20 பேர் பாதுகாப்பாக திமுர் பகுதியில் உள்ள பாதுகாப்புப் படை முகாமில் தஞ்சமடைந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள காவல்துறையினர், மீட்புப் படையினர் இணைந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Summary
At least 9 dead as flash flood ravages Nepal Rasuwa; mudslide hits China borde
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





