நேபாளத்தில் நடைபெறும் டி20 போட்டி தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டி20 உலகக் கோப்பை சாம்பியனான இந்திய அணி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.
அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை இழந்த இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரையும் 3-0 என்ற கணக்கில் இழந்தது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு சக நாடான நேபாளத்தில் டி20 தொடரை நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. டெஸ்ட் அந்தஸ்தைப் பெறாத நேபாள அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.
சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நேபாள அணி, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஆடியது. மேலும், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் போராடி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
ஜூலை மாதத்தின் கடைசியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தின் ஆரம்பத்தில் போட்டி நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த காலகட்டத்தில் இந்திய மூத்த வீரர்கள் அணி வேறு தொடர்களில் விளையாடவிருப்பதால், இந்திய 'ஏ' அணியை அனுப்புவது குறித்து பிசிசி தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
இந்திய 'ஏ' அணி கடந்த ஜூன் மாதம் இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு 'ஏ' தொடரில் விளையாடியது. இதில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்ததுபோன்று இந்தத் தொடரிலும் வாய்ப்பு கிடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Meanwhile, India A is set tour Nepal later this month, marking another significant step in the growing cricketing ties between the two neighbours.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








