கொலம்பியா நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 312 ஆக அதிகரித்துள்ளது.
சோகோ மாகாணத்தில் அமைந்துள்ள சான் ஜோஸ் டெல் பால்மா் பகுதியில், கடந்த ஆக. 10 ஆம் தேதி காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு முக்கிய நகரங்கள் பாதிக்கப்பட்டன. இதனால், 30,000-க்கும் அதிகமான வீடுகள் இடிந்து தரைமட்டமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகளின் மூலம், இதுவரை 312 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில், மாயமான 290 பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, இந்தப் பேரிடரால் 4,611 பேர் படுகாயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இடிபாடுகளில் இருந்து 358 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கொலம்பியாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.
இதுவரை 220 டன் அளவிலான மனிதாபிமான உதவிகள் கொலம்பியாவுக்கு வந்துள்ளதாகவும், 114 சர்வதேச மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் இணைந்துள்ளதாகவும் கொலம்பிய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
முன்னதாக, கொலம்பியா நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக இந்திய அரசு முதற்கட்டமாக 20 மெட்ரிக் டன் அளவிலான மனிதாபிமான உதவிகளை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
death toll from the powerful earthquake in Colombia has risen to 312.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இந்தோனேசியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு!

கொலம்பியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு!

வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 5,000-ஐ கடந்தது!

வெனிசுவேலா நிலநடுக்கம்: 3,500-ஐ கடந்த பலி எண்ணிக்கை!
விடியோக்கள்

வெற்றியா விசிக மாநாடு ? | VCK Manadu | Thirumavalavan | CM Vijay | TVK | Dinamani




