ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே கேரளத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை புகழ்பெற்ற குருவாயூர் கோயிலில், திருமணம் செய்துகொண்டார்.
ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினரான மார்ட்டின் டே மற்றும் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த நிதின் சந்த் ஆகிய இருவரும் காதலித்து தங்கள் குடும்பங்களின் சம்மதத்துடன் பிரிட்டனில் திருமணம் செய்துக்கொண்டனர்.
இருப்பினும், நிதின் சந்தின் விருப்பப்படி புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் இந்திய முறைப்படி திருமணம் செய்ய வேண்டுமென நீண்டகாலமாக இருவரும் திட்டமிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கோவிட் பெருந்தொற்று, கேரள வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு சூழல்நிலைகளால் இந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (ஆக. 18) குருவாயூர் கோயிலில், மார்ட்டின் டே மற்றும் நிதின் சந்த் ஆகிய இருவரும் தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.
கடந்த 2008 ஆம் ஆண்டு மேல் படிப்பிற்காக பிரிட்டன் நாட்டிற்குச் சென்ற எர்ணாகுளத்தின் பிரவோம் பகுதியைச் சேர்ந்த நிதின் சந்த் அந்நாட்டில் மார்ட்டின் டேவை காதலித்து திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Scottish MP Martyn Day married a woman from Kerala at the renowned Guruvayur Temple.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நிதின் நபின் குறித்து போலி புகைப்படம்: தில்லி காவல் துறையிடம் பாஜக சாா்பில் புகாா்

பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகள்! தமிழ்நாட்டிலிருந்து யார்?

அப்பா X மாமனார்! சட்டசபையா? குழாய் சண்டையா? சார்லஸ் மார்ட்டின் பேட்டி | TVK
கோலாகலமாகத் தொடங்கியது காமன்வெல்த் போட்டிகள்
விடியோக்கள்

"பேசணும்னு பேசாதீங்க!" பேரவையில் பொங்கிய அமைச்சர் ஆனந்த் | TVK | DMK | ADMK




