பாரதிய ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை தேசியத் தலைவர் நிதின் நவீன் திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.
பாஜகவின் தேசியத் தலைவராக கடந்த ஜனவரி மாதம் நிதின் நவீன் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பிறகு, அவரது தலைமையின் கீழ் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், பாஜகவின் தேசிய துணைத் தலைவர்கள், பொதுச் செயலர்கள் உள்ளிட்ட முக்கியப் பதவிகளுக்கான பட்டியலை நிதின் நவீன் வெளியிட்டுள்ளார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த வசுந்தரா ராஜே சிந்தியா, உத்தரகண்டைச் சேர்ந்த தீரத் சிங் ராவத், தில்லியைச் சேர்ந்த ராம் மாதவ் உள்பட 11 பேர் துணைத் தலைவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய அமைப்புப் பொதுச் செயலராக பி.எல். சந்தோஷும், பொருளாளராக பியூஷ் கோயலும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், தேசிய பொதுச் செயலர்களாக 8 பேரும், தேசிய செயலர்களாக 16 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த எம். வெங்கடேஷன், தேசிய செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
BJP chief Nitin Nibin announces names of new office bearers.
— ANI (@ANI) August 17, 2026
Vasundhara Raje Scindia, Tirath Singh Rawat, Ram Madhav, Baijyant Jay Panda, D Purandeshwari, Rekha Verma, Varshaben Narendrabhai Doshi, Bharti Pravin Pawar, Manpreet Singh Badal, Lal Singh Arya, M. Nagaraja, Tariq⦠pic.twitter.com/dnPE95CDVY
Summary
New office bearers for the national BJP! Who is from Tamil Nadu?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நான் பாஜகவின் பி-டீம் இல்லை: அண்ணாமலை
தமிழகத்துக்கு எதிராக கர்நாடக பாஜகவினர் போராட்டம்! நயினாரும் அன்புமணியும் எங்கே போனீர்கள்? காங்கிரஸ் கேள்வி

பங்கிபூர் வெற்றி: சரிகிறதா பாஜகவின் செல்வாக்கு? | Prashant Kishor | Bankipur |
குஜராத் இடைத்தேர்தல்: பாஜகவின் சதீஷ் படேல் முன்னிலை!
விடியோக்கள்

பயிர்க்கடன்: முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு! | TN Assembly | TVK



