மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!

நவீன இந்தியாவின் சிற்பி பிரதமர் மோடி! நிதின் நவீன் புகழாரம்!

மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக தலைவர் நிதின் நவீன் கூறியது பற்றி..

Nitin Nabin - modi

நிதின் நவீனுடன் பிரதமர் நரேந்திர மோடி - file photo

Published On :

பிரதமரை நவீன இந்தியாவின் சிற்பி என்று வர்ணித்த பாஜக தலைவர் நிதின் நவீன் நரேந்திர மோடிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு அரசியல் பிரமுகர்களும், கட்சி தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ் இந்தியா வளர்ச்சி மற்றும் தன்னிறைவில் புதிய உயரங்களை எட்டி வருகின்றது.

1950 செப்டம்பர் 17ல் குஜராத்தின் வத்நகரில் பிறந்த பிரதமர் மோடி, நாட்டின் 140 கோடி மக்களின் தலைவரும், தேச சேவை மற்றும் அர்ப்பணிப்பின் உருவமுமாகத் திகழ்கிறார். அவருக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

தேசம் முதலில் என்ற உறுதியால் வழிநடத்தப்பட்ட மோடியின் பயணம், சேவை, நல்லாட்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்த ஒரு உத்வேகம் அளிக்கும் காவியமாக அமைந்துள்ளது.

இது ஒரு தனிநபரின் பயணம் மட்டுமல்ல, நாட்டு மக்களுடன் இணைந்த பயணமும்கூட. பிரதமர் மோடி தனது செயல்பாடுகள் மற்றும் உறுதியான அர்ப்பணிப்பு மூலம் இதற்கு ஒரு திசையை வழங்கியுள்ளார்.

பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், இந்தியா வளர்ச்சி மற்றும் தன்னிறைவில் புதிய உயரங்களை எட்டி வருவதாகவும், சுயச்சார்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட அடையாளம் வலிமையுடன் உலக அரங்கில் சீராக முன்னேறி வருவதாகவும் அவர் கூறினார்.

சிறந்த ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் தேசத்திற்குத் தொடர்ந்து சேவை செய்வதற்கான வலிமையை வழங்க வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

பாஜகவின் ஒரு மாத கால 'சேவா சங்கல்ப் அபியான்' (சேவை உறுதிமொழி இயக்கம்) நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கும் விதமாக, கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமை நிதின் நவீன் தொடங்கி வைத்து, ரத்ததானம் செய்தார்.

மோடியின் பிறந்தநாள் 'சேவா திவாஸ்' (சேவை தினம்) ஆகக் கடைப்பிடிக்கப்படுகிறது; இதையொட்டி நாடு முழுவதும் ரத்ததான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இன்று மாலையில் 'ஆசிர்வாத் கா தியா' (ஆசிர்வாத விளக்கு) என்ற நிகழ்ச்சியையும் கட்சி ஏற்பாடு செய்யவுள்ளது. இதன் மூலம் மோடியின் 25 ஆண்டுக்கால பொதுச் சேவையை நினைவுகூரும் வகையிலும் நன்றியை வெளிப்படுத்தும் விதமாகவும் கட்சித் தொண்டர்கள் விளக்கேற்றுவார்கள். மாலை 6 மணி முதல் 7 மணி வரை மக்களும் தங்கள் வீடுகளில் இதேபோல விளக்கேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.