பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!
சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மரியாதை...
பெரியாரின் திருவுருவச் சிலைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மரியாதை - X
சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவுகூர்ந்து சமூக ஊடகங்களில் பதிவிட்டும் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் வருகின்றனர்.
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் பலரும் பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்.
அதன்பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
"தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்!
பல தலைமுறைகள் ஆதிக்கத்துக்குப் பணிந்தன. ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது. பல தலைமுறைகள் அதன் மாற்றத்தைக் காண்கின்றன. ஆனாலும், ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை. அதனை அடையாளம் காண வேண்டியது வரும் தலைமுறைகளின் பொறுப்பும்கூட!
வெளிச்சமற்ற இடம் இருள்; கேள்விகளற்ற சமூகம் அதைவிடப் பேரிருள்.
ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது. பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்!" என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
MK stalin paid tribute to periyar on his birthday
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







