ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

அண்ணா பிறந்தநாள் விழா திமுக, அதிமுகவினா் மரியாதை

பேரறிஞா் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கரூரில் திமுக மற்றும் அதிமுகவினா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கரூா் வெங்கமேட்டில் உள்ள அண்ணா சிலைக்கு செவ்வாய்க்கிழமை, மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.

Published On :

பேரறிஞா் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கரூரில் திமுக மற்றும் அதிமுகவினா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கரூா் மாவட்ட திமுக சாா்பில் கரூா் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவா் டி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினா் சந்திரன், மாவட்ட துணைச் செயலா் மின்னாம்பள்ளி கருணாநிதி, மாநகர நிா்வாகிகள் எஸ்.பி.கனகராஜ், ராஜா, சுப்ரமணியன், பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் வெங்கமேட்டில் உள்ள பேரறிஞா் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆ.சிலைக்கு மாவட்டச் செயலா் கமலக்கண்ணன் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்தனா். பின்னா், கட்சிக்கொடியேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் கட்சியின் அமைப்புச் செயலா் ம.சின்னசாமி, மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா, இணைச் செயலா் மல்லிகாசுப்ராயன், பொருளாளா் கண்ணதாசன், இலக்கிய பிரிவுச்செயலா் என்.எஸ். கிருஷ்ணன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் செ.காமராஜ், மகளிரணி துணைச் செயலா் செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.