‘பகுத்தறிவுப் பகலவன் பெரியாருக்குப் புரட்சி வணக்கம்’ - மு.க. ஸ்டாலின் புகழாரம்!
பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளதைப் பற்றி...
பெரியாருக்கு மரியாதை செலுத்திய மு.க. ஸ்டாலின். - (கோப்புப்படம்)
சமூக சீர்திருத்தவாதி பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி, தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர் பெரியார் எனப் பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமியின் பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
அவரது பிறந்த நாளையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்! பல தலைமுறைகள் ஆதிக்கத்துக்குப் பணிந்தன. ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது.
பல தலைமுறைகள் அதன் மாற்றத்தைக் காண்கின்றன. ஆனாலும், ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை. அதனை அடையாளம் காண வேண்டியது வரும் தலைமுறைகளின் பொறுப்பும்கூட!
வெளிச்சமற்ற இடம் இருள்; கேள்விகளற்ற சமூகம் அதைவிடப் பேரிருள். “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது. பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்!” எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழர௠தலà¯à®®à¯à®±à¯ தலà¯à®¨à®¿à®®à®¿à®°à®ªà¯ பாà®à¯à®ªà®à¯à® பà®à¯à®¤à¯à®¤à®±à®¿à®µà¯à®ªà¯ பà®à®²à®µà®©à¯ தநà¯à®¤à¯ பà¯à®°à®¿à®¯à®¾à®°à¯à®à¯à®à¯à®ªà¯ பà¯à®°à®à¯à®à®¿ வணà®à¯à®à®®à¯!
— M.K.Stalin (@mkstalin) September 17, 2026
பல தலà¯à®®à¯à®±à¯à®à®³à¯ à®à®¤à®¿à®à¯à®à®¤à¯à®¤à¯à®à¯à®à¯à®ªà¯ பணிநà¯à®¤à®©.
à®à®°à¯ தலà¯à®®à¯à®±à¯ பà¯à®°à®¿à®¯à®¾à®°à¯ நிà®à®´à¯à®¤à¯à®¤à®¿à®¯ பà¯à®°à®à¯à®à®¿à®¯à¯à®à¯ à®à®£à¯à®à®¤à¯.
பல தலà¯à®®à¯à®±à¯à®à®³à¯ à®à®¤à®©à¯ மாறà¯à®±à®¤à¯à®¤à¯à®à¯ à®à®¾à®£à¯à®à®¿à®©à¯à®±à®©.
à®à®©à®¾à®²à¯à®®à¯, à®à®¤à®¿à®à¯à®à®®à¯ à®à®©à¯à®©à¯à®®à¯ à®®à¯à®±à¯à®±à®¾à® à®à®à®²à®µà®¿à®²à¯à®²à¯.⦠pic.twitter.com/K0vRSuzqmB
Summary
Former Chief Minister and DMK leader M.K. Stalin has paid tribute to social reformer Periyar on the occasion of his birth anniversary.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





