பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

கனடாவில் விமானப் பயிற்சியின் போது விபத்து: தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 2 மாணவர்கள் பலி!

கனடாவில் விமானப் பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 2 மாணவர்கள் பலியாகினர்.

கோப்புப் படம்

Published On :

கனடாவில் விமானப் பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 2 மாணவர்கள் பலியாகினர்.

கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் இதுதொடர்பாக வெளியிட்ட இரங்கல் பதிவில், பலியான மாணவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த மனோஜ் சிவகுமார் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீசரண் திருஞானசம்பந்தம் ஆகியோர் என அடையாளம் கண்டுள்ளது.

அப்பதிவில், "கனடாவில் விமானப் பயிற்சியின்போது ஏற்பட்ட துயரமான விமான விபத்தில் உயிரிழந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இந்திய மாணவர்களான திரு. மனோஜ் சிவகுமார் மற்றும் ஸ்ரீசரண் திருஞானசம்பந்தம் ஆகியோரின் மறைவுக்கு வான்கூவரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

இந்தக் கடினமான சூழலில், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எங்கள் மனமார்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்குக் கொண்டுவருவது தொடர்பாகக் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்துத் உதவிகளையும் வழங்க இந்தியத் துணைத் தூதரகம் தயாராக உள்ளது. அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்திய மாணவர்களின் விபத்து பற்றிய மேலதிக விவரங்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை.

கனடா செய்தி நிறுவனங்களின் அறிக்கைகளின்படி, விமானப் பயிற்சிப் பள்ளியான ஹார்வ்ஸ் ஏர் இயக்கிய செஸ்னா 172 என்கிற விமானம், ரெஜினா பகுதியிலிருந்து மனிடோபாவின் ஸ்டீன்பாக் பகுதிக்கு இரவு நேர நீண்ட தூரப் பயணத்தில் 2 உரிமம் பெற்ற விமானிகளை ஏற்றிச் சென்றது. அந்த விமானம், வெள்ளிக்கிழமை அதிகாலை சஸ்காட்செவனின் கிஸ்பே அருகே விபத்துக்குள்ளானதில், விமானிகள் இருவரும் பலியாகினர்.

காலை 10.30 மணிக்குள் விமானம் அதன் இலக்கை அடையத் தவறியதால் அதுதொடர்பாக விமானப் போக்குவரத்து வாரியத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

அன்று மாலை 6 மணியளவில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

விமானிகள் இருவரும் தங்களது வர்த்தக விமான உரிமங்களுக்கான விமானப் பயண நேரத்தை அதிகரிக்க குறிப்பிட்ட விமானத்தை வாடகைக்கு எடுத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

Two students from Tamil Nadu and Puducherry died in an accident during flight training in Canada.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.