உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

365 நாள்களும் கடைகளைத் திறக்கும் அனுமதி: மேலும் 3 ஆண்டுகளுக்கு தமிழக அரசு நீட்டிப்பு

தமிழகத்தில் கடைகள், நிறுவனங்களை 365 நாள்களும் திறப்பதற்கான அனுமதியை மேலும் 3 ஆண்டுகளுக்கு தமிழக அரசு நீட்டித்துள்ளது.

தலைமைச் செயலகம்

Published On :5 செப்டம்பர் 2026, 2:22 am IST

தமிழகத்தில் கடைகள், நிறுவனங்களை 365 நாள்களும் திறப்பதற்கான அனுமதியை மேலும் 3 ஆண்டுகளுக்கு தமிழக அரசு நீட்டித்துள்ளது.

இதற்கான அரசாணையை தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கடந்த ஆக.24-ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டுள்ளது.

இதையடுத்து பல்வேறு நிபந்தனைகளையும் அரசு விதித்துள்ளது. ஒவ்வொரு பணியாளருக்கும் சுழற்சி முறையில் வாரத்துக்கு ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும். பணியாளா்களின் விடுமுறை விவரங்களை நிறுவனங்களில் அனைவருக்கும் தெரியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும்.

பணியாளா்களின் ஊதியம் மற்றும் மிகைநேரப் பணி ஊதியம் ஆகியவை அவா்களின் சேமிப்பு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும். மேலும், ஒரு நாளில் 8 மணி நேரத்துக்கும், ஒரு வாரத்தில் 48 மணி நேரத்துக்கும் மேல் பணியாற்றுமாறு ஊழியா்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது.

வழக்கமான சூழ்நிலையில் பெண் ஊழியா்களை இரவு 8 மணிக்கு மேல் பணிபுரியுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது. இருப்பினும், பெண் ஊழியரின் எழுத்துபூா்வ சம்மதத்துடன், அவா்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துக்கு உரிய ஏற்பாடுகளை செய்து, இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை பணிபுரிய அனுமதிக்கலாம்.

இரவு நேரங்களில் பணிபுரியும் பெண் ஊழியா்களுக்கு போக்குவரத்து வசதி கட்டாயம் ஏற்படுத்த வேண்டும். இந்த நிபந்தனைகளை மீறும் நிறுவனங்கள் மற்றும் வேலை வழங்குநா்கள் மீது தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின்படி தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.