FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

முதல்வர் விஜய்யின் அலுவலக அறை ஒப்பந்த முறைகேடு? தமிழக அரசு விளக்கம்

நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் அலுவலக அறை ஒப்பந்தத்தில் விதிமீறல்கள் இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து தமிழக அரசு விளக்கம்...

News image

நாமக்கல் கவிஞர் மாளிகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள்...

Updated On :19 ஆகஸ்ட் 2026, 10:00 pm IST

நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் அலுவலக அறை ஒப்பந்தத்தில் விதிமீறல்கள் இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10-வது தளத்தில் மேற்கொள்ளப்படும் கட்டட பணிகள் தொடர்பாக ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

10-வது தளத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கை கலைவாணர் அரங்கம் வளாகத்தில் மாற்றும் பொருட்டு அரங்கில் உள்ள மேஜை, நாற்காலிகள் ஒலிவாங்கி, ஆகிய தளவாடங்களை அகற்றும் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது.

ஒப்பந்தப் புள்ளியில் கோரப்பட்ட நிர்வாக அலுவலகம் அமைக்கும் பணிகளுக்கும், இப்பணிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

நிர்வாக அலுவலக வசதிகள் செய்யும் பணிகளானது, ஒப்பந்தப் புள்ளி பெறப்படவுள்ள கடைசி நாளான 01.09.2026 அன்று கூர்ந்தாய்வு செய்து, குறைந்த தொகையினை கோரிய ஒப்பந்ததாரருக்கு (L1-Tenderer), பணிகள் மேற்கொள்ள பணி ஆணை வழங்கிய பின்னரே பணிகள் தொடங்கப்படும்.

ஒப்பந்தப் புள்ளிகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நாளிலிருந்து, தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளி விதிகள் 2000-இன்படி ரூ.10 கோடிக்கு குறைவாக மதிப்புள்ள பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்ட நாளிலிருந்து, ஒப்பந்தப் புள்ளி பெறுவதற்கான கடைசி நாள் வரை குறைந்தபட்சம் 15 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும்.

ஒப்பந்தப் புள்ளி அறிவிக்கை செய்தித் தாள் மற்றும் மாநில ஒப்பந்தப் புள்ளி செய்தி மலரில் வெளியான நாளிலிருந்து ஒப்பந்தப் புள்ளிகள் பெறுவதற்கான கடைசி நாள் வரை உள்ள கால அவகாசம் - 18 நாட்கள்.

ஒப்பந்தப் புள்ளி, படிவங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஒப்பந்தப் புள்ளிகள் பெறுவதற்கான கடைசி நாள் வரை உள்ள கால அவகாசம் - 15 நாட்கள்.

ஒப்பந்தப்புள்ளி கோரும் அலுவலர், மாநில ஒப்பந்தப்புள்ளி மலரில் வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கையில், 15.8.2026 மற்றும் 16.8.2026 ஆகிய இரண்டு நாட்களும் அரசு விடுமுறை என்பதால் ஒப்பந்தப்புள்ளி சம்பந்தமான விவரம் 17.8.2026 முதல் tntenders.gov.in இணையதளம் வாயிலாக கிடைக்கப்பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10-வது தளத்தில் பிளாக்-1, பிளாக்-2 மற்றும் பிளாக்-3 என நிர்வாக அலுவலக வசதிகள் செய்யும் பணிகளில் கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி நாளான 01.09.2026 அன்று 3.00 மணி வரை பெறப்பட்டு L1 Tenderer இறுதி செய்யப்பட்டு, அதன் பின்னர் பணிகள் மேற்கொள்ளப்படும்.

எனவே, பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டதில் எவ்வித விதி மீறலும் இல்லாமல் முறையாக கோரப்பட்டுள்ளது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Summary

Irregularities in the contract for Chief Minister Vijay's office room Tamil Nadu government issues clarification

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.