சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!

ஆசிய நாடுகளில் அதிக பங்குச் சந்தை முதலீடு பெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா கடைசி இடத்திற்குச் சென்றது குறித்து...

News image

கோப்புப் படம்

Updated On :19 ஆகஸ்ட் 2026, 9:20 pm IST

ஆசிய நாடுகளில் அதிக பங்குச் சந்தை முதலீடு பெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. பேங்க் ஆஃப் அமெரிக்கா நடத்திய ஆய்வுகளின் முடிவில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

ஆசிய நாடுகளில் கடைசி இடத்தில் இந்தோனேஷியா இருந்த நிலையில், ஆகஸ்ட் மாத ஆய்வின்படி தற்போது இந்தியா கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுவது அதிகரித்து வருவதால் பங்குச் சந்தை குறியீடுகள் தொடர்ந்து இறங்கு முகத்தில் இருந்து வருகின்றன.

பேங்க் ஆஃப் அமெரிக்காவின் கணக்கெடுப்பின்படி, பதிலளித்தவர்களில் 32% பேர் இந்தியாவில் நிகரக் குறைவான முதலீட்டைக் கொண்டிருந்தனர்.

மேலும், ஆசியாவின் நான்காவது பெரிய பங்குச் சந்தை மீதான இந்த மந்தமான பார்வைக்கு, சீர்திருத்தங்களின் பற்றாக்குறை மற்றும் உயர்ந்த மதிப்பீடுகள் ஆகியவற்றை அவர்கள் முக்கிய காரணங்களாகக் குறிப்பிட்டனர்.

2026-ஆம் ஆண்டில் இதுவரை, தைவான் மற்றும் கொரியப் பங்குச் சந்தைக் குறியீடுகள் ஒவ்வொன்றும் 50%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. அதேவேளையில் ஜப்பானியச் சந்தை 26%-க்கும் அதிகமாக ஏற்றம் கண்டுள்ளது. இதற்கிடையில், இந்தியாவின் நிஃப்டி (Nifty) குறியீடு கிட்டத்தட்ட 8% சரிவைக் கண்டுள்ளது.

மலேசியா, நியூசிலாந்து பங்குச் சந்தைகள் எந்தவித ஏற்ற இறக்கத்தையும் சந்திக்காத நிலையில், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளின் பங்குச் சந்தை 5 சதவிகிதம் சரிந்துள்ளன.

சீன பங்குச் சந்தை 18 சதவிகிதமும், பிலிப்பைன்ஸ் 23 சதவிகிதம், இந்தோனேஷியா 27 சதவிகிதம் சரிந்துள்ளன. இந்திய பங்குச் சந்தை முதலீடுகள் 32% சரிந்து கடைசி இடத்தில் உள்ளது.

Summary

India is now the least favored stock market in Asia BofA survey

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.