நாட்டில் தனிநபர் ஒருவர் தனது பெயரில் அல்லது ஒரு அடையாள ஆவணத்தின் கீழ் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதிகபட்சமாக 6 சிம் கார்டுகள் வைத்திருக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
சைபர் மோசடி, டிஜிட்டல் கைது போன்றவற்றைத் தடுக்க சிம் கார்டுகள் வாங்குவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது.
இதன்படி, தனி நபர் ஒருவர் அதிகபட்சம் 9 சிம்கார்டுகளை வைத்திருக்கலாம் என்றும் ஜம்மு - காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு அதிகபட்சம் 6 சிம் கார்டுகள் அனுமதிக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
புதிய தொலைத்தொடர்பு விதிகளின்படி, சிம்கார்டுகளை வாங்குபவர்களின் விவரங்களை உடனடியாக நிறுவனங்கள் சரிபார்க்க வேண்டும்.
டிஜிட்டல் இண்டலிஜென்ஸ் பிளாட்பார்ம் வழியாக வாடிக்கையாளர்களை ஆய்வு செய்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனத் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனுமதியை மீறி சிம் பெறுவோருக்கு ரூ. 50,000 முதல் ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் மோசடி வழக்குகளில் சிறை தண்டனையும் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஆதார் எண்ணில் எத்தனை சிம் கார்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை அறிய சஞ்சார் சாதி போர்ட்டல் (Sanchar Saathi Portal) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Only 9 SIM cards allowed per person! Central Government tightens rules
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிஎஸ்என்எல் சிம் விற்பனை: இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்
‘பயங்கரவாதத்தை ஒழித்தால்தான் பாகிஸ்தானுடன் உறவு’: நாடாளுமன்றத்தில் அரசு உறுதி

சென்னையில் போலி ஆவணம் மூலம் சிம் கார்டு வாங்க முயற்சி: கேரள கள்ளநோட்டு கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது
புதிய ரேஷன் கார்டுகள் எப்போது வழங்கப்படும்? அமைச்சர் தகவல்
விடியோக்கள்

வெற்றியா விசிக மாநாடு ? | VCK Manadu | Thirumavalavan | CM Vijay | TVK | Dinamani




