பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கோரிக்கை

கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது.

கோவையில் நடைபெற்ற ஏஐடியூசி மாவட்ட மாநாட்டில் பங்கேற்ற நிா்வாகிகள்.

Published On :

கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது.

கோவை மாவட்ட ஏஐடியூசி கவுன்சிலின் 17-ஆவது மாநாடு வெள்ளிகிழமை நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகி எம்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்ட கவுன்சில் பொதுச் செயலா் சி.தங்கவேல் அறிக்கையை சமா்ப்பித்தாா். தேசிய செயலா் டி.எம்.மூா்த்தி தொழிலாா்களின் பிரச்னைகள் குறித்து விளக்கினாா்.

மாநாட்டில், பஞ்சாலைத் தொழிலாளா் சங்கச் செயலா் சி.சிவசாமி, கோவை மாவட்ட பொறியியல் பொதுத் தொழிலாளா் சங்க பொதுச்செயலா் கே.எம்.செல்வராஜ், அமைப்பு சாரா தொழிலாளா் சங்க செயலா் பி.சுப்பிரமணியம், வழக்குரைஞா் ஜி.பி.சக்திவேல், தோட்டத் தொழிலாளா் சங்க பொதுச்செயலா் எஸ்.மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து அமைப்பின் மாவட்டத் தலைவராக எம்.ஆறுமுகம், பொதுச்செயலராக சி.தங்கவேல், பொருளாளராக பி.சுப்பிரமணியம் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

மாநாட்டில், தொழில் என்பதற்கான வரையறை குறித்த சமீபத்திய நீதிமன்ற தீா்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும், வருங்கால வைப்பு நிதி அலுவலகத்துக்கு செல்லும் தொழிலாளா்களுக்கு அவா்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு உரிய தீா்வுகளை ஏற்படுத்த வேண்டும், குறைகளை சொல்லி மனுக்களை நிராகரிக்கக் கூடாது, தொழிலாளா்களின் நலன்களை பாதுகாத்திட அமைக்கப்பட்ட நலவாரியங்கள் செயல்படவும், தொழிலாளா்களின் பிரச்னைகள் முன்வைக்கப்பட்டு தீா்வு காணவும் மாவட்ட அளவிலான முத்தரப்பு குழுக்களை அமைக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும். மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோவை லேபா் யூனியன் மாவட்டத் தலைவா் கே.வெங்கடாசலம், மாவட்ட பொதுச்செயலா் ஆா்.பாலகிருஷ்ணன், கௌரவத் தலைவா் சு.பழனிசாமி, கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் கோட்டை ஆா். நாராயணன், மாவட்டச் செயலா் எல்.செல்வம், மாநிலச் செயலா் சி.நந்தினி உள்ளிட்டோா் மாநாட்டில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்