தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதுதான் நிர்வாகமா? மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு! மும்பையில் ஞானேஷ் குமாருக்கு எதிரான சிஜேபியின் போராட்டம் தொடங்கியது! மதுராந்தகத்தில் தேநீர் கடையில் வாக்கு சேகரித்த முதல்வர் விஜய்!ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்! 500 பேர் கைது!“ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?” - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!

தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்தாரா மு.க. ஸ்டாலின்?

தவெக வேட்பாளர் சத்யபாமாவால் எப்படி பல்டி அடிக்க முடிந்தது என மு.க. ஸ்டாலின் விமர்சித்தது குறித்து...

DMK Chief M.K. Stalin body-shamed TVK candidate Sathyabhama

தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்

Published On :

தவெக வேட்பாளர் சத்யபாமாவை பல்டி பாமா என தாராபுரம் தேர்தல் பிரசாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துப் பேசியுள்ளார்.

தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து சித்தராவுத்தன்பாளையத்தில் நடைபெற்று வரும் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, "பொதுத் தேர்தல் நடந்து முடிந்து 5 மாதங்கள்கூட ஆகவில்லை. அதற்குள்ளாக இந்த இடைத்தேர்தல். இது எதனால் வந்தது? இதற்குக் காரணமானவர்கள் யார் என நீங்கள் சிந்திக்க வேண்டும்.

சத்தியத்துக்கு விரோதமாகச் செயல்பட்ட அந்த (தவெக) வேட்பாளரை பெட்டி பாமா மற்றும் பல்டி பாமா என்று மக்கள் அழைக்கின்றனர். அந்த உருவத்தை வைத்து எப்படித்தான் பல்டி அடித்தார் எனத் தெரியவில்லை.

பொதுவாக சட்டப்பேரவை உறுப்பினர் இறந்தால்தான், அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் வரும். இந்தத் தேர்தல் அப்படி வந்ததல்ல. ஆனால், நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர் (சத்யபாமா), ஜனநாயகத்தை சாகடித்து விட்டார். அதனால்தான் இந்த இடைத்தேர்தல் வந்திருக்கிறது.

ஆட்டம் காணக்கூடிய இந்த ஆளுங்கட்சிக்கு துணைபோகவும், விலைபோனதாலும் தான் இந்த இடைத்தேர்தல் வந்துள்ளது. வாக்களித்த உங்கள் மீது துளிகூட மதிப்பே இல்லாமல், தேர்தலில் வைக்கப்பட்ட விரல் மை அழிவதற்கு முன்னரே, வேறு கட்சிக்கு ஓடிப்போன அவர்களின் செயல்தான் காரணம்" என்று தெரிவித்தார்.

Summary

DMK Chief M.K. Stalin body-shamed TVK candidate Sathyabhama

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER