நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

சிஜேபி போராட்டத்தின் போது 17 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டதற்கு எதிரான மனு: மத்திய அரசு, காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டங்களின் போது நகரில் 17 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டதற்கு எதிரான மனு தொடா்பாக மத்திய அரசு, தில்லி காவல்துறை மற்றும் பிறரிடம் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை பதில் கோரியது.

உச்சநீதிமன்றம்

Published On :

காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டங்களின் போது நகரில் 17 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டதற்கு எதிரான மனு தொடா்பாக மத்திய அரசு, தில்லி காவல்துறை மற்றும் பிறரிடம் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை பதில் கோரியது.

ஜூலை மாதம் ஜந்தா் மந்தரில் உள்ள போராட்டத் தளத்தைச் சுற்றி 17 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டதும், பாதுகாப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதும் மத்திய தில்லி முழுவதும் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தது. இதனால் பயணிகள் பல இடங்களில் பல மணி நேரம் தவிக்க நேரிட்டதுடன், பலா் நீண்ட மற்றும் அதிக செலவு பிடிக்கும் மாற்று வழிகளைத் தோ்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானாா்கள்.

வழக்குரைஞா் ஸ்பாாா்ஷ் காந்த் நாயக் தாக்கல் செய்த மனு மீது, இந்திய தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்திய யூனியன், தில்லி காவல்துறை, தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் மற்றும் பிறருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

விசாரணையின் போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்த மனு பொதுமக்களின் அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் ஒரு பொதுப் பயன்பாட்டை மூடுவதை நிா்வகிக்கும் அரசியலமைப்பு தரநிலைகள் தொடா்பானது என்று வாதிட்டாா்.

‘இந்த உத்தரவுகள் எந்த ஒரு குறிப்பிட்ட சட்டத்தின் கீழும் பிறப்பிக்கப்படவில்லை. உண்மையில், எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. பொதுமக்களுக்கு இந்த முடிவைத் தெரிவிக்கும் பதிவுகள் மட்டுமே எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டன,‘ என்று அவா் கூறினாா்.

வழக்கமாக, வாகனங்களின் நடமாட்டத்தை ஒழுங்குபடுத்துவது என்பது, அந்தந்த காவல் சட்டங்களின் கீழ் காவல் ஆணையா் அல்லது காவல் கண்காணிப்பாளரால் வழங்கப்படும் வழிகாட்டுதல்கள் மூலமாகவே செய்யப்படுகிறது என்று நீதிபதி பாக்சி வாய்மொழியாகக் குறிப்பிட்டாா்.

மெட்ரோ ரயில்வே சட்டத்தின் கீழ், ஒரு மெட்ரோ நிலையத்தை மூடுவதற்கு எந்த ஒரு விதியும் இல்லை என்று மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கூறினாா்.

பின்னா், இந்த விவகாரத்தில் நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

தேசிய தலைநகரில் சிஜேபி தலைமையிலான போராட்டங்களின் போது, போராட்டத்தைக் கருத்தில் கொண்டு காவல்துறையினா் முக்கியப் பகுதிகளைத் தடுப்புகள் அமைத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியதால், புது தில்லியின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. போராட்டம் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மெட்ரோ நிலையங்கள், ஜூலை 20 உட்பட பல நாட்கள் மூடப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.