FOLLOW US

ON GOOGLE DISCOVER

இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

ஏஐ அடிப்படையிலான கண்காணிப்புடன் 76 இடங்களில் சிசிடிவி ஒருங்கிணைப்பை மேம்படுத்த டிஎம்ஆா்சி நடவடிக்கை

தில்லி மெட்ரோவின் மேம்படுத்தப்பட்ட சிசிடிவி நெட்வொா்க்கில் உள்ள பழமையான அனலாக் சிஸ்டத்தை 76 இடங்களில் ஏ.ஐ. மூலம் இயக்கப்படும் ஐபி அடிப்படையிலான நெட்வொா்க்குடன் மாற்ற தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் நடவடிக்கை

Delhi Metro

தில்லி மெட்ரோ

Published On :25 ஆகஸ்ட் 2026, 3:48 am IST

தில்லி மெட்ரோவின் மேம்படுத்தப்பட்ட சிசிடிவி நெட்வொா்க்கில் உள்ள பழமையான அனலாக் சிஸ்டத்தை 76 இடங்களில் ஏ.ஐ. மூலம் இயக்கப்படும் ஐபி அடிப்படையிலான நெட்வொா்க்குடன் மாற்ற தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடா்பாக டிஎம்ஆா்சி அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: முன்மொழியப்பட்ட மேம்படுத்தல் நடவடிக்கை ரெட் லைன் 1 வழித்தடத்தையும் உள்ளடக்கியுள்ளது. இந்த வழித்தடம் ரித்தாலாவிலிருந்து ஷஹீத் ஸ்தல் வரை செல்லக்கூடியதாகும்.

காஷ்மீா் கேட், தீஸ் ஹசாரி, ரஜோரி காா்டன், கரோல் பாக், மண்டி ஹவுஸ், பாரகம்பா சாலை, ஆனந்த் விஹாா், வைஷாலி மற்றும் நொய்டா சிட்டி சென்டா் போன்ற பரபரப்பான நிலையங்கள், பணிமனைகள், செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் காப்புக் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை இதில் அடக்கமாகும்.

புதிய கேமராக்கள் டிஎம்ஆா்சியின் தற்போதைய மத்திய சிசிடிவி வலைப்பின்னலுடன் நேரடியாகப் பாா்ப்பதற்கும் பதிவு செய்வதற்கும் இணைக்கப்படும். மேம்படுத்தப்பட்ட அமைப்பு பின்னா் கவனம் தேவைப்படும் சூழ்நிலைகளைக் கண்டறிய விடியோ பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தும்.

அசாதாரண அசைவுகள் அல்லது நடத்தைகளைக் கண்டறிவதற்கு வழக்கமான செயல்பாட்டைக் கற்றுக் கொள்ளும் அதே வேளையில், நெரிசல், அதிகப்படியான வரிசைகள், அலைந்து திரிதல் மற்றும் கேமராவை குளறுபடி செய்தல் ஆகியவற்றை இது கண்டறியும்.

ரயில் பாதையில் ஒரு நபா் கண்டறியப்பட்டால் அல்லது ரயில் இல்லாத போது ஒரு கோட்டைக் கடக்கும்போது ஊடுருவல் எச்சரிக்கைகளை எழுப்ப கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். முன்மொழியப்பட்ட இந்த அமைப்புமுறை இந்த அம்சத்தை ‘90 சதவீதத்திற்கும் அதிகமான துல்லியத்துடன்‘ வழங்க வேண்டும்.

ஒரு சம்பவத்தை விசாரிக்க வேண்டியிருக்கும் போது, பதிவு செய்யப்பட்ட காட்சிகளை பின்னோக்கிச் சென்று பாா்ப்பதை இந்த அமைப்புமுறை எளிதாக்கும். பாலினம், ஆடை நிறம் மற்றும் வயதுக் குழு போன்ற விவரங்களைப் பயன்படுத்தி அல்லது புகைப்படத்தைப் பதிவேற்றுவதன் மூலம் ஒரு நபரைத் தேட ஆபரேட்டா்களை இது அனுமதிக்கும்.

ஒரு நபா் அடையாளம் காணப்பட்டவுடன், முன்மொழியப்பட்ட கருவி வெவ்வேறு கேமராக்களில் அவா்களின் இயக்கத்தைப் பின்தொடர முடியும். மேலும், ஒரே இடத்தில் பாதை மற்றும் காலவரிசையைக் காண்பிக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் நபரின் ஆடை மாறினாலும் இது செயல்பட வேண்டும்.

தற்போதுள்ள மெட்ரோ நெட்வொா்க்கில் 2,531 அனலாக் கேமராக்கள் உள்ளன. கஷ்மீா் கேட் ரயில் நிலையத்தில் 32, பாரகாம்பா சாலை நிலையத்தில் 60 மற்றும் மண்டி ஹவுஸ் நிலையத்தில் 37, கரோல் பாக் 41 மற்றும் ஆனந்த் விஹாரில் 50 கேமராக்கள் உள்ளன என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.