
இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் இஸ்ரேல் பிரதமர் உரையாடல்! உலக நாயகன் என புகழாரம்!
இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசியில் உரையாடியது குறித்து...

இந்திய விமானி ஸ்மித் மச்சார் - எக்ஸ்
இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசியில் உரையாடினார்.
துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி புறப்பட்ட விமானத்தில் சக விமானியால் கத்தியால் குத்தப்பட்டு தாக்கப்பட்ட போதும் துணிவுடன் போராடிய இந்திய விமானி ஸ்மித் மச்சார் பயணிகளின் உயிரைக் காத்தார்.
விமானத்தை வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்க முயன்ற அந்த விமானியைப் பயணிகள் மடக்கிப் பிடித்ததால், துணை விமானிகளால் சவூதி அரேபியாவில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு, பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 174 பயணிகளுடன் புதன்கிழமை புறப்பட்ட ஃபிளைதுபை நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 மேக்ஸ்' விமானத்தில் அரங்கேறிய இச்சம்பவம் உலகம் முழுவதையும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த இக்கட்டான சூழலிலும் திறன்பட செயல்பட்ட இந்திய விமானி ஸ்மித் மச்சாரை உலகமே பாராட்டி வருகிறது. அவரை ‘நடுவானில் பயணிகள் உயிரைக் காத்த ஹீரோ’ என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் தொலைபேசியில் உரையாடினேன். முழு உலகத்தின் நாயகன் என்றே அவரை அழைக்க வேண்டும். மேலும், இஸ்ரேலின் அடுத்த சுதந்திர நாளன்று தீபம் ஏந்தி சிறப்பிக்க பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கும் அழைப்பு விடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Summary
Israeli Prime Minister Netanyahu spoke over the phone with Indian pilot Smith Machar.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




