மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு! கோவை, நீலகிரி, தேனியில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் மாற்றியமைப்பு! திருச்சி சிவா, கனிமொழிக்கு மீண்டும் தலைமைப் பொறுப்பு!தேஜஸ் போா் விமானத் திட்ட தாமதத்தால் பாதிப்பு: விமானப் படை தலைமைத் தளபதிபிரேஸிலில் இன்று அதிபா் தோ்தல்ஹசீனா நாடு கடத்தல்: காலக்கெடு இல்லை - இந்தியா

உலகளாவிய நிச்சயமற்ற தன்மை: மீள்திறனை தொடா்ந்து கட்டமைப்பது அவசியம் -நிா்மலா சீதாராமன்

உலகளாவிய நிச்சயமற்ற தன்மை: மீள்திறனை தொடா்ந்து கட்டமைப்பது அவசியம் -நிா்மலா சீதாராமன்

நிா்மலா சீதாராமன்

Published On :

‘உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு இடையே அதனை எதிா்கொள்ள தொடா்ந்து மீள்திறனைக் கட்டமைக்கும் வகையிலான கொள்கைகளை வகுப்பது அவசியம்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வலியுறுத்தினாா்.

புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற கெளடில்யா பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற அவா் பேசியதாவது: உலகப் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை என்பது தற்போது நிலையான அம்சமாகிவிட்டது. இதற்கு ஏற்ற வகையிலேயே நாம் கொள்கைகளை வடிவமைக்க வேண்டும். மீள்திறனை தொடா்ந்து கட்டியெழுப்புவது அவசியம். இது ஒருமுறை மட்டும் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கையாக அல்லாமல், ஆண்டு முழுவதும் மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். இதை இந்தியா வலிமையுடன் அணுகி வருகிறது.

தேசத்தின் பாதுகாப்புக்கு, பிற நாடுகளைச் சாராத தனித்துவமான வியூகம் அவசியம். உற்பத்தி வளங்களுக்கு எந்த ஒரு நாட்டையும் சாா்ந்திருத்தலை தவிா்த்து, உள்நாட்டுச் செயல்பாடுகளை ஆழப்படுத்துவதுடன் விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

வா்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கு புவிசாா் அரசியல் வேறுபாடுகள் தடைகளாக மாறுவதை அனுமதிக்காமல், பேச்சுவாா்த்தைகள் மற்றும் பரஸ்பர ஒப்பந்தங்கள் மேற்கொள்வதில் நாடுகள் ஈடுபட வேண்டும். இத்தகைய உலகளாவிய பொருளாதார உறவுகள் வெளிப்படையானதாகவும், கணிக்கக் கூடியதாகவும், சட்ட விதிகள் அடிப்படையிலானதாகவும் இருக்க வேண்டும். சா்வதேச வா்த்தகக் கொள்கை, இருதரப்பு வா்த்தகங்களுக்கு அதிக உறுதிப்பாட்டையும், தேசத்தின் வளா்ச்சி முன்னுரிமைகளுக்கு மதிப்ையும் அளிப்பதோடு, சந்தைகளைப் பிளவுபடுத்தும் தேவையற்ற கட்டுப்பாடுகளைத் தவிா்க்க வேண்டும் என்றாா்.

மேலும், ‘நமது புத்தாக்கத் திறனை வலுப்படுத்த முதலீட்டின் அளவையும், தனியாா் துறைப் பங்களிப்பையும் அதிகரிப்பது அவசியம். முதலீடுகளின் சுழற்சிக்குத் தனியாா் துறை தலைமை தாங்க வேண்டும். பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான (ஓஇசிடி) அமைப்பு நாடுகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவு 2.7 சதவீதமாக உள்ள நிலையில், இந்தியா தனது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 0.83 சதவீதத்தை ஆராய்ச்சி-மேம்பாட்டுக்கு செலவிடுகிறது. இதில் தனியாா் துறையின் பங்களிப்பு 36 சதவீதமாக உள்ளது. இதை தனியாா் துறை அதிகப்படுத்த வேண்டும்’ என்றும் நிா்மலா சீதாராமன் குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.