‘பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உலகளாவிய ஆதரவு அவசியம்’ - நவநீதம் நவி பிள்ளை
பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உலகளாவிய ஆதரவு அவசியம் என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளதைப் பற்றி...
நவநீதம் நவி பிள்ளை - (கோப்புப் படம்)
பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உலகளாவிய ஆதரவு அவசியம் என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நவநீதம் நவி பிள்ளை தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க சட்ட நிபுணரான நவநீதம் 'நவி' பிள்ளைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ் மொழியையும் தமிழர்களின் பெருமையையும் பறைசாற்றும் வகையில், நவநீதம் நவி பிள்ளை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பிரத்யேக தொலைபேசி உரையாடலில்...
நீங்க தென்னாப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்திருந்தாலும், உங்கள் குடும்பத்தின் வேர்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. உங்களின் தமிழ் அடையாளம் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு வடிவமைத்திருக்கிறது?
நான் மன்னிப்புடன் தொடங்க விரும்புகிறேன். என்னுடைய பெற்றோர் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர்கள். அவர்களுக்குத் தமிழ் பேசத் தெரியாது. என்னுடைய தந்தைவழித் தாத்தா மதுரைக்கு அருகிலுள்ள வத்தலக்குண்டைச் சேர்ந்தவர். அவர்கள்தான் என் குடும்பத்தின் வேர்கள். அவர்களுடன் எனக்கு ஒரு பிணைப்பு இருப்பதாக உணர்கிறேன்.
உலகம் முழுவதும் நடக்கும் போர்களில் உங்களை மிகவும் கவலைக்குள்ளாக்கிய விஷயம் என்ன?
ஆயுதச் சண்டைகளும் போர்களும் கவலையளிக்கும் வகையில் இருக்கின்றன. என் சொந்த நகரமான கேப் டவுனில்கூட பார்க்கிறோம். திருட்டுக் கும்பல்கள் அப்பாவி மக்களிடம் கொள்ளையடிக்கின்றன. வீடுகளிலும் போர்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறையும் பெரும் கவலை தருகிறது.
இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிந்து 16 ஆண்டுகளுக்கும் மேலாகியும், தமிழ் குடும்பங்கள் நீதி கிடைக்குமா என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
உள்நாட்டுப் போரில் தங்கள் விருப்பத்துக்குரியவர்களுக்கு என்னவாயிற்று என்பதைப் பற்றி அறிந்துகொள்ள அவர்கள் விரும்புகின்றனர். ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையராக இருந்தபோது, நான் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தேன்.
இந்த உலகம் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவளிக்க விரும்புகிறது. அவர்களுக்கென்று தனி நாடு கோரிக்கை விடுத்தாலும் சரி அல்லது அவர்களுக்கு நேர்ந்த துயரங்களுக்கு நீதி வேண்டினாலும் சரி அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவான சூழலை உறுதி செய்வதே இதற்கான ஒரே தீர்வு.
உங்களால் எந்த அளவுக்கு தமிழில் பேச முடியும்: தமிழ்நாட்டிற்கு வரும் திட்டம் ஏதேனும் இருக்கிறதா?
நான் இளம் வழக்குரைஞராக இருந்தபோது, எனக்கு ஓரளவு தமிழில் பேசத் தெரியும். ஒரு மொழியை அடிக்கடி பேசவில்லை என்றால் அதை மறந்துவிடுகிறோம்.
என்னால் என் பெயரை உச்சரிக்க முடியும். வணக்கம், நமஸ்காரம் போன்ற வாழ்த்துச் சொற்கள் தெரியும். சர்வதேச நீதிமன்றத்தில் உள்ள ஒரு வழக்கில் நான் தற்காலிக நீதிபதியாக இருப்பதால், எனக்கு இன்னும் சில வேலைகள் மீதமிருக்கின்றன. அதன்பின்னர் நிச்சயமாக சொந்த ஊருக்குச் செல்வேன்.
தமிழ்நாட்டில் சாதிய பாகுபாடு மிகப்பெரிய கவலையாக இருக்கிறேதே? அதைப் பற்றி...
பல சவால்கள் இருக்கின்றன. ஆனால், இந்தியா சிறந்த அரசியலமைப்பைக் கொண்டுள்ள நாடு. மக்களுக்கு ஊறு விளைவிக்கும் மரபுகளை ஒழிக்க இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பாகுபாடுகள் பல ஆண்டுகளாகத் தொடர்கின்றன.
இந்தியாவிலும் சாதிப் பாகுபாட்டிற்கு எதிரான சட்டங்கள் இருக்கின்றன. சாதிய நடவடிக்கைகளை பலர் கடைப்பிடித்து வருகின்றன. இந்தியாவில் புத்திசாலிகள் நிறைய பேர் இருக்கின்றனர். அவர்கள் இதற்கான தீர்வைக் காண்பார்கள் என்று நினைக்கிறேன்” என்றார் அவர்.
Summary
SPEAKING about the role of the international community in ensuring justice for the Tamils affected by the civil war in Sri Lanka, this year’s Nobel Peace Prize winner Navanethem ‘Navi’ Pillay strongly advocated for the global community to sustain a supportive environment for the affected people.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

