தமிழக ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி!
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து...

ஆர்.வி. அர்லேகர் - கோப்புப் படம்
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்ட ஆளுநர் அங்கு 2 நாள்கள் தங்கி சிகிச்சை பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளுநருடன் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனையில் இருந்து கவனித்து வருகின்றனர்.
இருப்பினும், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாரா? அல்லது என்ன காரணத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்த எந்தத் தகவல்களும் ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.
Summary
Tamil Nadu Governor R.V. Arlekar has been admitted to a private hospital in Chennai for treatment.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


