சட்டம்- ஒழுங்கு பிரச்னை: மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார் ஆளுநர் அர்லேகர்!
தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நாளை (நவ. 13) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளதைப் பற்றி...
மத்திய அமைச்சர் அமித் ஷா - ஆளுநர் அர்லேகர்.
தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நாளை (நவ. 13) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஆளுநர்கள் மாற்றத்தின்போது, கேரள ஆளுநராக இருந்த ஆர்.வி.ஆர்லேகர் தமிழக பொறுப்பு ஆளுநராகவும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் கடந்த அக். 12 ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழ்நாடு ஆளுநராக முதல் முறையாக தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நாளை (நவ. 13 ) சந்திக்க இருக்கிறார்.
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. தீபாவளிப் பண்டிகையன்று மட்டும் 8 பேர் கொலை செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக சிறைக்கைதிகள் தப்பிச்சென்றது போன்ற பிரச்சினைகளால் பெரும் பரபரப்பான சூழலில் நிலவி வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்தான அறிக்கை கேட்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியான நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா - ஆளுநர் ஆர்லேகரின் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
தலைநகர் தில்லியில் நாளை அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பை முடித்துக்கொண்டு, ஜம்மு - காஷ்மீரில் உள்ள தனியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் அர்லேகர் நாளை மறுநாள் (நவ. 14) கலந்துகொள்கிறார். அதனைத்தொடர்ந்து ஆளுநர் அர்லேகர் நவ. 15 ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Reports indicate that Tamil Nadu Governor Rajendra Vishwanath Arlekar is set to meet Union Home Minister Amit Shah tomorrow (Nov. 13).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

