மத்திய அமைச்சர் அமித் ஷா நாளை குஜராத் பயணம்! 81 அடி உயர சிவன் சிலைக்கு அடிக்கல்!
மத்திய அமைச்சர் அமித் ஷா நாளை குஜராத் செல்வது குறித்து...

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா - (கோப்புப் படம்)
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை (அக். 16) குஜராத் மாநிலத்துக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் காந்தி நகர் மற்றும் அகமதாபாத் நகரங்களில் நாளை நடைபெறும் மத நிகழ்ச்சிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கவுள்ளார். இந்தப் பயணத்தில், 81 அடி உயர சிவன் சிலைக்கு அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டுவார் எனக் கூறப்பட்டுள்ளது.
நவராத்தியை முன்னிட்டு குஜராத் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மத நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய கர்பா நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் இந்தப் பயணம் அமைந்துள்ளது.
இதையடுத்து, நாளை மதியம் 2.45 மணி முதல் 3.15 மணிவரை அகமதாபாதில் ஜெயின் மதத்தைச் சேர்ந்த மதகுருக்களை நேரில் சந்திக்க இருப்பதாகவும், இரவு 7.30 மணியளவில் மன்சாவில் உள்ள பஹுசார் மாதா கோயிலில் வழிபாடு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காந்தி நகரின் ரூபால் சக்திபீடம் ஸ்ரீ வரதாயினி மாதாஜி கோயிலில் மாலை 6 மணியளவில் நடைபெறும் 81 அடி உயர சிவன் சிலையின் அடிக்கல் நாட்டும் விழாவில் அமைச்சர் அமித் ஷா பங்கேற்று வழிபாடு செய்யவுள்ளார்.
இறுதியாக, கடந்த செப். 27 ஆம் தேதி குஜராத் சென்றிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அகமதாபாதில் உள்ள சபர்மதி ரயில் நிலையத்தில் ரூ. 1,472 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை தொடங்கிவைத்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Union Home Minister Amit Shah will visit the state of Gujarat tomorrow (Oct. 16).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


