சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!
சென்னை பெரம்பூரில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு...
முதல்வர் விஜய் - X
சென்னை பெரம்பூர் தொகுதி பேசின் பாலம் அருகே மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதற்கு முன்னதாகவே நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனிடையே சென்னையில் தனது தொகுதியான பெரம்பூரில் பேசின் பாலம் அருகே மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு செய்தார். அவருடன் அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.
சென்னை மாநகராட்சி பேசின் பாலம் பகுதியில் ஓட்டேரி நல்லா கால்வாயானது பக்கிங்ஹாம் கால்வாயில் சேரும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆகாயத் தாமரைகள் மற்றும் வண்டல்களை அகற்றும் பணிகளை முதல்வர் விஜய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Summary
Chief Minister Vijay inspects rainwater drainage works in Chennai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

