ஆந்திரத்தில் முதல்வர் விஜய்! உற்சாக வரவேற்பு!
நதிநீர் இணைப்பு குறித்து பேச முதல்வர் விஜய், ஆந்திர மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளது பற்றி....

ஆந்திரத்தில் முதல்வர் விஜய் - X
நதி நீர் குறித்து விவாதிக்க, ஆந்திர முதல்வரைச் சந்திக்கும்பொருட்டு முதல்வர் விஜய் இன்று பிற்பகல் அங்கு சென்றார்.
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் விஜயவாடா விமான நிலையம் சென்ற தமிழக முதல்வர் விஜய்க்கு அங்குள்ள தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அங்கிருந்து அவர் சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள கனக துர்கை அம்மன் கோயிலுக்குச் செல்லும் முதல்வர் விஜய், மாலை 4.30 மணியளவில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து பேசுகிறார்.
தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூரில் அமைந்துள்ள கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீர் குறித்தும், கோதாவரி - கிருஷ்ணா- காவிரி ஆகிய தென் மாநில நதிகளை இணைக்கும் திட்டம் குறித்தும் இரு மாநில முதல்வர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணையும் முதல்வர் விஜய் சந்திக்க உள்ளார். தசரா பண்டிகையையொட்டி, விஜயவாடாவில் நடைபெறும் கலாசார திருவிழாவில் பவன் கல்யாணுடன் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
முதல்வர் விஜய், அந்திரத்திற்குச் சென்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
Summary
CM vijay reached vijayawada to meet andra pradesh CM chandra babu naidu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


