ஆந்திரத்தில் நவராத்திரி விழா! சந்திரபாபு நாயுடுவுடன் பங்கேற்ற முதல்வர் விஜய்!
ஆந்திர நவராத்திரி விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டது குறித்து...

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் ஜோசப் விஜய் - எக்ஸ்
ஆந்திரத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டுள்ளார்.
அமராவதியில் உள்ள முதல்வர் இல்லத்தில் இருந்து இருவரும் ஒரே காரில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகைப் புரிந்தனர்.
தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூரில் அமைந்துள்ள கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீர் குறித்தும், கோதாவரி - கிருஷ்ணா- காவிரி ஆகிய தென் மாநில நதிகளை இணைக்கும் திட்டம் குறித்தும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் ஆலோசனை நடத்த முதல்வர் விஜய் இன்று ஆந்திரத்திற்குச் சென்றுள்ளார்.
சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக விஜயவாடா விமான நிலையம் சென்ற முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணா நதிக் கரையில் இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள கனக துர்கா கோயிலுக்குச் சென்றுள்ளார் முதல்வர் விஜய்.
அங்கு முதல்வர் விஜய்க்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் அங்கு சாமி தரிசனம் செய்தார்.
இதன் பிறகு, அமராவதியில் உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இல்லத்துக்குச் சென்ற முதல்வர் விஜய், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், கிருஷ்ணா நதி நீர் திறப்பு குறித்தும் கோதாவரி - கிருஷ்ணா - காவிரி இணைப்பு குறித்தும் பேசியதாகத் தெரிகிறது.
இந்த சந்திப்பின்போது தமிழக நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதனை அடுத்து விஜயவாடாவில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் விஜய் பங்கேற்றார். இருவரும் ஒரே காரில் சென்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
Summary
Navaratri celebrations in Andhra! Chief Minister Vijay participates alongside Chandrababu Naidu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


