அன்பில் மகேஸுக்கு நவ. 4 வரை போலீஸ் காவல் தவெக ஆட்சியில் புதைக்கப்பட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சி: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!உண்மையைப் பேசுவதில் அரிச்சந்திரனுக்கே டஃப் கொடுக்கும் தவெக ஆட்சி! அப்படி என்னதான் சொன்னார்கள்?சோப்ளாங்கி என்றால் என்ன அர்த்தம்? வைரலாகும் வார்த்தை!முரசு புயல் எச்சரிக்கை! சென்னையில் கடல் சீற்றம்; அலைகள் 2.1 மீ. உயரம் எழும்!சென்னைக்கு 180 கி.மீ. தொலைவில் முரசு தீவிரப் புயல்! எங்கே, எப்போது கரையைக் கடக்கும்?முரசு புயல் எங்கே இருக்கிறது? சென்னைக்கு ஜாக்பாட் அடிக்குமா?முரசு புயல்: சென்னையில் 11 விமான சேவைகள் ரத்து!கனமழை: சென்னைப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!புதுக்கோட்டை, ஈரோட்டில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் திடீர் இடமாற்றம்!ஆம்னி பேருந்துகள் முன்பதிவுக்கு புதிய செயலி அறிமுகம்!

அடுத்தடுத்து புயல்கள்! முதல்வர் விஜய்யிடம் உதவி கோரிய சந்திரபாபு நாயுடு!

முதல்வர் விஜய்யிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உதவி கோரியது பற்றி...

vijay chandrababu

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் விஜய். - கோப்புப்படம்

Updated On :

புயல் நிவாரணப் பணிகளுக்காக தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யிடம் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு உதவி கோரியுள்ளார்.

வங்கக் கடலில் உருவான ‘அர்னாப்’ புயல், மிகத் தீவிர புயலாக வலுவடைந்து, ஆந்திர மாநிலம் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினத்துக்கு இடையே உள்ள ஏனாம் (புதுச்சேரி நிர்வாகத்துக்கு உள்பட்ட பகுதி) அருகே கடந்த புதன்கிழமை கரையைக் கடந்தது.

இந்த புயல் கரையைக் கடக்கும் போது, விநாடிக்கு 135 கி.மீ. வேகம் வரை காற்று வீசியதால் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன.

இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளைத் தொடங்குவதற்குள், வங்கக் கடலில் அடுத்த புயல் உருவாகியுள்ளது.

தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ள ‘முரசு’, இன்று நள்ளிரவில் ஆந்திரத்தின் நெல்லூருக்கும் நர்சாபுரத்திற்கும் இடையே, ஒங்கோலுக்குத் தெற்கே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்க்கு ஞாயிற்றுக்கிழமை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மீட்புப் பணிகளுக்கான உதவிகளைக் கோரியுள்ளார்.

இதுதொடர்பாக ஆந்திரப் பிரதேச முதல்வர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் பதிவில், “புயல் பாதிப்புச் சூழலில், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, மின் கட்டமைப்புகளைச் சீரமைக்கத் தமிழக அரசின் உதவியைக் கோரினார்.

புயலால் ஏராளமான மின் கம்பங்கள் சேதமடைந்துள்ள நிலையில், அவற்றைச் சீரமைப்பதற்கான பணியாளர்களையும் இயந்திரங்களையும் அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். இதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் சாதகமான பதிலை அளித்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, ஆந்திரப் பிரதேசத்துக்கு தேவையான உதவிகளைச் செய்யவும், மின் கட்டமைப்பை சீரமைக்க ஊழியர்களை அனுப்பவும் தமிழ்நாடு மின்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

Summary

cyclone damages - Chandrababu Naidu seeks assistance from Chief Minister Vijay!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.