சென்னைக்கு 180 கி.மீ. தொலைவில் முரசு தீவிரப் புயல்! எங்கே, எப்போது கரையைக் கடக்கும்?

தீவிரப் புயலான ‘முரசு’ எங்கே, எப்போது கரையைக் கடக்கும்?

cyclone murasu

சென்னைக்கு 180 கி.மீ. தொலைவில் முரசு தீவிரப் புயல் - IMDChennai

Updated On :

சென்னைக்கு 180 கி.மீ.க்கு வடகிழக்கே முரசு தீவிரப் புயல் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை அறிவித்துள்ளது.

நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கி, இரண்டாவது காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) தெற்கு அந்தமான் கடலில் கடந்த அக். 29-ஆம் தேதி உருவானது. இது படிப்படியாக வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணி அளவில் ‘முரசு’ புயலாக வலுப்பெற்றது.

இந்தப் புயல் மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தீவிர புயலாக இன்று காலை வலுப்பெற்றது.

எங்கே, எப்போது கரையைக் கடக்கும்?

முரசு தீவிரப் புயல் இன்று நள்ளிரவில் ஆந்திர மாநிலம், நெல்லூருக்கும் நர்சாபுரத்துக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (நவ. 2) காலை 10 மணியளவில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“மேற்கு - மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள தீவிர புயலான “முரசு”, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 22 கி.மீ வேகத்தில் மேற்கு - வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளது. இன்று, (நவம்பர் 2) காலை 8.30 மணி நிலவரப்படி, இது மேற்கு - மத்திய வங்கக் கடலில், 14.1° வடக்கு அட்சரேகை மற்றும் 81.4° கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் மையம் கொண்டுள்ளது.

இது நெல்லூரிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 160 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து (தமிழ்நாடு) வடகிழக்கே 180 கி.மீ தொலைவிலும், காவலியிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு-தென்கிழக்கே 180 கி.மீ தொலைவிலும், ஒங்கோலிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) தென்கிழக்கே 210 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) தெற்கே 240 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, இன்று (நவம்பர் 2) நள்ளிரவு (இரவு 11:30 மணி) முதல் நாளை (நவம்பர் 3) அதிகாலை (காலை 04:00 மணி) வரையிலான இடைப்பட்ட நேரத்தில், நெல்லூருக்கும் நர்சாபுரத்திற்கும் இடையே, ஒங்கோலுக்குத் தெற்கே, தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடக்கக்கூடும். அ

அப்போது, காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 120 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

'Murasu' severe cyclonic storm 180 km from Chennai! Where and when will it cross the coast?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.