உண்மையைப் பேசுவதில் அரிச்சந்திரனுக்கே டஃப் கொடுக்கும் தவெக ஆட்சி! அப்படி என்னதான் சொன்னார்கள்?சோப்ளாங்கி என்றால் என்ன அர்த்தம்? வைரலாகும் வார்த்தை!முரசு புயல் எச்சரிக்கை! சென்னையில் கடல் சீற்றம்; அலைகள் 2.1 மீ. உயரம் எழும்!சென்னைக்கு 180 கி.மீ. தொலைவில் முரசு தீவிரப் புயல்! எங்கே, எப்போது கரையைக் கடக்கும்?முரசு புயல் எங்கே இருக்கிறது? சென்னைக்கு ஜாக்பாட் அடிக்குமா?முரசு புயல்: சென்னையில் 11 விமான சேவைகள் ரத்து!கனமழை: சென்னைப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!புதுக்கோட்டை, ஈரோட்டில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் திடீர் இடமாற்றம்!ஆம்னி பேருந்துகள் முன்பதிவுக்கு புதிய செயலி அறிமுகம்!

சோப்ளாங்கி என்றால் என்ன அர்த்தம்? வைரலாகும் வார்த்தை!

சோப்ளாங்கி என்றால் என்ன அர்த்தம் என்று பலரும் இணையத்தில் தேடத் தொடங்கியிருக்கிறார்கள்.

The Search Before the Appointment: How Men Can Find Reliable Health Information Online

வைரலாகும் வார்த்தை - ஏஎன்ஐ

Updated On :

அண்மையில் தமிழகத்தில் ஆளும் தவெக ஆட்சியை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சோப்ளாங்கி அரசு என்று கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், அதற்கு அர்த்தம் என்ன என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

கடந்த வாரம், தவெக அரசை விமர்சித்து மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருந்த விடியோவில், தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பின்மை, வரலாறு காணாத விலைவாசி உயர்வு நிலவுகிறது.

திமுக ஆட்சியின்போது, இந்தியாவிலேயே பணவீக்கம் குறைவாக இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. ஆனால், இப்போது இருக்கும் ஆட்சியாளர்களுக்கு எந்தத் துறையிலும் நிர்வாகத் திறன் இல்லை. நிர்வாகம் என்றால் என்ன என்பதே தெரியாத ஒரு மூடர் கூடத்தின் ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தவெக அரசு, சொந்த புத்தியும் இல்லாத சொல் புத்தியும் இல்லாத சோப்ளாங்கி அரசு என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த சோப்பளாங்கி என்ற சொல், சோம்பல், சோபலம் என்ற சொல்லிலிருந்து மருவி, சோம்பலுடைய, எதற்கும் பயனற்றவர் என்பதை குறிக்கும் வகையில் உருவான பேச்சு வழக்குச் சொல். இதில் சோபலம் என்பது மெதுவாக இயங்குபவர்களையும் குறிக்கும்.

சோப்ளாங்கி என்றால் என்ன என்று சாட் ஜிபிடி-யிடம் கேட்டால்...

​சோப்ளாங்கி (Soblangi / Soplangi) என்பது தமிழ்நாட்டில், குறிப்பாகக் கொங்கு மண்டலப் பகுதிகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒரு வட்டார வழக்குச் சொல்லாகும்.

​இந்தச் சொல்லுக்கான பொதுவான அர்த்தங்கள் மற்றும் பயன்பாடுகள்:

​சோம்பேறி / மந்தமானவர்: எந்தவொரு வேலையையும் செய்யாமல் சோம்பித் திரிபவர்களை அல்லது சுறுசுறுப்பின்றி எதற்கும் உதவாமல் இருப்பவர்களைக் குறிக்க இச்சொல்லைப் பயன்படுத்துவார்கள்.

​அதிர்ஷ்டமில்லாதவர் / சோகம்: சில நேரங்களில் எதிலுமே அதிர்ஷ்டம் இல்லாமல், எப்போதும் ஒருவித சோர்வுடனோ அல்லது கவலையுடனோ இருப்பவர்களையும் குறிப்பதுண்டு.

​பயனற்ற நிலை: ஒரு பொருள் அல்லது நபர் எந்தவொரு பயனும் தராமல் வீணாக இருப்பதைக் குறிக்கவும் பேச்சுவழக்கில் இது பயன்படுத்தப்படும்.

​சுருக்கமாகச் சொன்னால், 'சுறுசுறுப்பற்ற, சோம்பேறியான அல்லது எதற்கும் தகுதியற்ற' என்ற பொருளில் இச்சொல் வழக்கில் உள்ளது.

தமிழ் அகராதிகளில், சோப்பளாங்கி என்பது பயனற்றவர் அல்லது வலுவற்றவர் என்று ஒரு நபரை இழிவாகக் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் பேச்சு வழக்குச் சொல் என்று கூறப்பட்டுள்ளது.

Summary

What does 'sopplangi' mean? A word that's going viral!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.