முரசு புயல் எங்கே இருக்கிறது? சென்னைக்கு ஜாக்பாட் அடிக்குமா?

முரசு புயல் எங்கே இருக்கிறது அதனால் சென்னைக்கு மழை வாய்ப்பு கிடைக்குமா என்பது பற்றி..

புயல் மேகங்கள்

புயல் மேகங்கள் - IMD

Updated On :

வங்கக் கடலில் நிலவுரம் முரசி புயல் சின்னம் தற்போது எங்கே இருக்கிறது? சென்னைக்கான மழை வாய்ப்பு என்ன என்பது குறித்து வானிலை நிலவரங்களை கணித்து சமூக வலைத்தளத்தில் வழங்கி வரும் தமிழ்நாடு வெதர்மேன் எனப்படும் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார்.

அவர் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, முரசு (Murasu) புயல் இப்போது எங்கே உள்ளது? இது மிக அதிவேகமாக நகர்ந்து, நெல்லூர் - காவலி பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தற்போது இது சென்னை அட்சரேகைக்கு வடக்கே கடந்துவிட்டது.

சென்னைக்கு முரசு புயலால் என்ன காத்திருக்கிறது? மேகங்கள் மேற்கு நோக்கி நகரும்போது, ​​அவை சென்னையின் மீது, குறிப்பாக வட மற்றும் மத்திய சென்னையின் மீது படரக்கூடும். மேகங்களின் ஒரு குறிப்பிட்ட பகுதி மிகவும் அடர்த்தியாகத் தெரிகிறது; நல்வாய்ப்பாக அந்த மேகங்கள் சென்னையின் மீது அமைந்தால், நல்ல மழை பொழிய வாய்ப்புள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

என்ன சொல்கிறது வானிலை?

வங்கக் கடலில் நிலவும் முரசு புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாயப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 15 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

என்ன சொல்கிறது முரசு புயல்?

2026-ஆம் ஆண்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி, இரண்டாவது காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) தெற்கு அந்தமான் கடலில் அக். 29-ஆம் தேதி உருவானது. இந்தப் புயல் சின்னம் அக்.30-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவியது. அடுத்து மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து அக்.31 காலை 11.30 மணியளவில் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

ஞாயிறு காலை மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு பகுதிகளில் காலை 11.30 மணிக்கு ‘முரசு’ புயலாக வலுப்பெற்றது.

இந்தப் புயல் மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நெல்லூா் மற்றும் நரசாப்பூா் இடையே திங்கள்கிழமை நள்ளிரவு முதல் நவ. 3 அதிகாலை வரையிலான இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Summary

Where is Cyclone Murasu? Will Chennai hit the jackpot?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.