டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு தொடங்கியது!மாநிலத்தின் பெருமைகளை நிலைநிறுத்திட உறுதியேற்போம்: தமிழ்நாடு நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!வங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘முரசு’ புயல்! ராம்லீலா மைதானத்தில் இண்டி கூட்டணி பேரணி: பாதுகாப்புப் பணியில் 4,000 காவலா்கள்ஜிபிஎஸ் கருவி பொருத்தாத லாரிகள் கனிம வளங்கள் எடுத்துச் செல்ல இன்றுமுதல் தடை!ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள்: இன்று முதல் அமல்குட்கா முறைகேடு வழக்கு: சிறப்பு நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

முரசு புயல்: சென்னைக்கு எவ்வளவு அருகில் வரும்? எங்கெல்லாம் கனமழை! முழு விவரம்!

முரசு புயலால், நவ. 2,3 ஆகிய தேதிகளில் சென்னையில் மழைக்கு வாய்ப்பு.

murasu cyclone

முரசு புயல்: சென்னைக்கு எவ்வளவு அருகில் வரும்? - படம்: எக்ஸ்

Updated On :

வங்கக் கடலில் முரசு புயல் இன்று (நவ. 1) உருவாக வாய்ப்புள்ள நிலையில், எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் விரிவாக தெரிவித்துள்ளார்.

வானிலை நிலவரங்களை அவ்வப்போது சமூக ஊடகங்களில் பதிவிடும் தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான் தெரிவித்திருப்பதாவது:

”முரசு புயல், தெற்கு ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், அதன் வெளிப்புற மழை மேகக் கூட்டங்கள் நவ. 2, 3 ஆகிய தேதிகளில் வட தமிழகத்தை நோக்கி வர வாய்ப்புள்ளது. குறிப்பாக, நாளை அதிகாலை முதல் சென்னையில் மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

புயல் நமக்கு அருகில் வரும்போது, வெப்பமான சூழல் மாறி, இதமான சூழலுக்குத் திரும்பி மழை பெய்யும். வலுவான மேகக் கூட்டங்களும், மிகத் தீவிரமான மழைப் பொழிவுப் பகுதியும் பெரும்பாலும் கடல் பகுதியிலேயே நீடித்து, தெற்கு மத்திய ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகரும்.

இருப்பினும், புயல் வடக்கு நோக்கி நகரும்போது, புயலின் வெளிப்புற பகுதிகளில் உருவாகும் மழைக் மேகங்கள், சென்னைக்கு அருகில் வரும்போது, சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழையானது சென்னைக்குக் கிடைக்காமல் போகலாம். இருப்பினும், மழை மேகக் கூட்டங்கள் நகரின் பல்வேறு பகுதிகளைக் கடந்து செல்லும்போது, அவ்வப்போது மழை பதிவாகும்.

தெற்கு மத்திய ஆந்திரப் பகுதிகள்: கனமழை முதல் மிக கனமழை மற்றும் அதி கனமழை வரை பதிவாகும் முக்கியப் பகுதியாக இந்தப் பகுதிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட தமிழகப் பகுதிகள் (KTCC):

புயல் வடக்கு நோக்கி நகரும்போது, அதன் வெளிப்புற மழை மேகக் கூட்டங்கள் வட தமிழகத்தை அடைந்து மிதமான மழையைக் கொடுக்கலாம்.

சென்னை:

சென்னையில் மிதமான மழை பெய்ய நிச்சயமாக வாய்ப்புள்ளது. ஆனால், கனமழையானது சென்னையிலிருந்து நீண்ட தொலைவில் பெய்யவே வாய்ப்பு அதிகம். அதிர்ஷ்டம் இருந்தால், வட சென்னையின் கடலோரப் பகுதிகளுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது

தமிழகத்தின் வடக்கு பகுதிகளான பொன்னேரி - கும்மிடிப்பூண்டி - பழவேற்காடு பகுதிகளுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சுருக்கமாக சொன்னால், இந்தப் புயலால் கிடைக்கும் மழையை, சென்னை தவறவிடாது. ஓரளவுக்கு மழை கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், மிக அதிகமான மழைப்பொழிவு தெற்கு மத்திய ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளில்தான் பெய்யும் எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் சென்னையைக் கடந்து வடக்கு நோக்கி நகரும்போது, ரேடார் மூலம் மேகங்களின் நகர்வைக் கண்காணிப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

புயலின் நகர்வுப் பாதையில் ஏற்படும் சிறிய மாற்றம்கூட சென்னைக்கு குறிப்பிடத்தக்க மழையைக் கொடுக்கலாம்.

அடுத்த இரண்டு நாள்களில் சென்னையின் சில பகுதிகளில், இந்தப் புயல் மூலம் 40–70 மி.மீ. மழை கிடைத்தால்கூட மகிழ்ச்சியாக இருக்கும்!” என்று பதிவிட்டுள்ளார்.

Summary

With the potential for Cyclone 'Murasu' to form in the Bay of Bengal today (Nov 1), private weather forecaster Pradeep John has provided detailed information on the areas likely to receive rainfall.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.