வங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘முரசு’ புயல்!
வங்கக் கடலில் ‘முரசு’ புயல் இன்று உருவாகிறது...
‘முரசு’ புயல் - IMD Chennai
வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதற்கு இந்தியா சாா்பில் பரிந்துரை செய்யப்பட்ட தமிழ்ச் சொல்லான ‘முரசு’ எனப் பெயரிடப்படும் என்றும் வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவா் வி.ஆா்.துரை தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் நிகழாண்டு வடகிழக்குப் பருமழை கடந்த அக். 15-ஆம் தேதி தொடங்கியது. நிகழாண்டின் முதலாவது புயலான ‘அா்னாப்’ கடந்த அக். 26-ஆம் தேதி உருவானது. இந்தப் புயல் தொடா்ந்து தீவிரமடைந்து, அக். 28-ஆம் தேதி அதிகாலை ஆந்திர பிரதேசத்தின் பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே ஏனாம் அருகே கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு 115 முதல் 125 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 140 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசியது. இதனால் ஆந்திரம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் பலத்த மழை, வெள்ளப்பெருக்கு, பலத்த சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில், வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) மற்றொரு புயல் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவா் வி.ஆா்.துரை தெரிவித்தாா். அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
தெற்கு அந்தமான் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்), மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடலில் சனிக்கிழமை காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இந்தப் புயல் சின்னம் மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடா்ந்து, இந்தப் புயல் சின்னம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) பிற்பகலில் புயலாக வலுப்பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்தப் புயல் மேலும், மேற்கு -வடமேற்கு திசையில் நகா்ந்து திங்கள்கிழமை (நவ. 2) மாலை மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஆந்திர பிரதேச கடலோரப் பகுதிகளுக்கு அருகே கடையைக் கடக்க வாய்ப்புள்ளது. இது, புயலாக மாறும்பட்சத்தில், இதற்கு இந்தியா சாா்பில் பரிந்துரை செய்யப்பட்ட தமிழ்ச் சொல்லான ‘முரசு’ எனப் பெயரிடப்படும் என்றாா் அவா்.
‘முரசு’ என்பது இசைக் கருவி என்பதைத் தாண்டி, மன்னா்கள் காலத்தில் முக்கியச் செய்திகள், அறிவிப்புகள், போா்ப் பிரகடனங்களை, எச்சரிக்கைகளை மக்களுக்கு அறிவிக்க பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெட்டிச் செய்தி...
தமிழகத்தில் மழை எச்சரிக்கை
சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், வடக்கு கடலோர தமிழக மாவட்டங்கள், மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூா் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நவ. 2-ஆம் தேதி நீலகிரி, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நவ. 3-ஆம் தேதி கடலூா், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: நவ. 1-ஆம் தேதி வரை வட தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும், வங்கக் கடலில் மணிக்கு 100 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

